மூத்த குடிமக்களுக்கான இலவச மருத்துவ முகாம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மூத்த குடிமக்களுக்கான இலவச மருத்துவ முகாம்

Added : அக் 13, 2021
Share
பொள்ளாச்சி:பொள்ளாச்சி மக்கள் மருந்தகம் சார்பில், மூத்த குடிமக்களுக்கான இலவச மருத்துவ முகாம் நடத்தி, மருந்துகள் வழங்கப்பட்டன.பொள்ளாச்சி வெங்கடேசா காலனி, வள்ளலார் வீதியில் மத்திய அரசின் மலிவு விலை மருந்தகம் செயல்படுகிறது. இங்க, மூத்த குடிமக்களுக்கான இலவச மருத்துவ முகாம் நடந்தது.முகாம் ஏற்பாடுகளை, கடை உரிமையாளர் கோகுல்குமார், மூத்த மருந்தாளுனர் திருஞானசம்பந்தம்

பொள்ளாச்சி:பொள்ளாச்சி மக்கள் மருந்தகம் சார்பில், மூத்த குடிமக்களுக்கான இலவச மருத்துவ முகாம் நடத்தி, மருந்துகள் வழங்கப்பட்டன.பொள்ளாச்சி வெங்கடேசா காலனி, வள்ளலார் வீதியில் மத்திய அரசின் மலிவு விலை மருந்தகம் செயல்படுகிறது. இங்க, மூத்த குடிமக்களுக்கான இலவச மருத்துவ முகாம் நடந்தது.முகாம் ஏற்பாடுகளை, கடை உரிமையாளர் கோகுல்குமார், மூத்த மருந்தாளுனர் திருஞானசம்பந்தம் செய்திருந்தனர். சர்க்கரை நோய் நிபுணர் டாக்டர் தீபக், பல் மருத்துவ நிபுணர் டாக்டர் கிருத்திகா, பொது மருத்துவ நிபுணர்கள் டாக்டர் சுதர்சன் மற்றும் கமல் ஆகியோர், மூத்த குடிமக்களுக்கு சர்க்கரை, ரத்த அழுத்தம், பல் பரிசோதனை செய்தனர்.உடல் நல குறைபாடுகளுக்கு ஏற்ப, மருத்துவ ஆலோசனைகள் வழங்கினர். மேலும், 75 வயது மூத்தோருக்கு அன்றாட வாழ்வில் தேவைப்படும், பொது மருந்துகள் அடங்கிய பெட்டிகள் இலவசமாக வழங்கப்பட்டன.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X