பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளிகளில் ஆய்வு நடத்த திட்டம்

Added : அக் 13, 2021
Share
Advertisement
உடுமலை:கொரோனா பரவல் காரணமாக, கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. கடந்த மாதம் முதல் 9 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு வகுப்புகள் துவங்கின.தற்போது, நவம்பர் மாதம், ஒன்று முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு, நேரடி வகுப்புகள் துவக்கப்படுகிறது என அரசு அறிவித்துள்ளது. இதற்காக, உடுமலை கல்வி மாவட்டத்தில், 93 துவக்கப்பள்ளிகள், 25 நடுநிலைப்பள்ளிகளில்,

உடுமலை:கொரோனா பரவல் காரணமாக, கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. கடந்த மாதம் முதல் 9 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு வகுப்புகள் துவங்கின.தற்போது, நவம்பர் மாதம், ஒன்று முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு, நேரடி வகுப்புகள் துவக்கப்படுகிறது என அரசு அறிவித்துள்ளது. இதற்காக, உடுமலை கல்வி மாவட்டத்தில், 93 துவக்கப்பள்ளிகள், 25 நடுநிலைப்பள்ளிகளில், முன்னேற்பாடு பணிகள் தீவிரமடைந்துள்ளன.மாணவர்கள் வருகையொட்டி, வகுப்பறைகள், தளவாடப்பொருட்கள், கதவு, ஜன்னல்கள், தலைமையாசிரியர் அறை, சமையலறை, கழிவுவறை உள்ளிட்டவை கிருமிநாசினி பயன்படுத்தி சுத்தப்படுத்தப்பட்டு வருகிறது.அதேபோல், பள்ளிக் கட்டடத்தின் மேற்பரப்பில் குப்பை அகற்றப்பட்டு, மழைநீர் வழிந்தோடுவதற்கான பாதை, மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு ஆகியவை சீரமைக்கப்பட்டும், பயன்பாட்டுக்கும் கொண்டுவரப்படுகிறது.குறிப்பாக, மாணவர்களுக்கு பாதுகாப்பான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வட்டார கல்வி அலுவலர்கள் பிரிட்டோ மற்றும் சரவணன் கூறியதாவது: பள்ளிகளில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு பள்ளியிலும் தேவைக்கு ஏற்ப முகக்கவசம், சானிடைசர், தெர்மல் ஸ்கேனர் உள்ளிட்டவைகளை இருப்பு வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.பள்ளிகள் திறப்பின் போது, நுழைவாயிலில், மாணவர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்யத் தேவையான வசதிகள் செய்யப்படுகிறது. பள்ளிகளின் தயார் நிலை குறித்து, அறிக்கை சமர்ப்பிக்கப்படவும் உள்ளது. இதற்காக, பள்ளிகளில் நேரடி ஆய்வு நடத்தப்படும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X