பொது செய்தி

தமிழ்நாடு

ஓடை ரோடு அகலப்படுத்தும் பணி: இழுபறிக்கு பின் கம்பங்கள் அகற்றம்

Added : அக் 13, 2021
Share
Advertisement
உடுமலை:உடுமலை தங்கம்மாள் ஓடை அகலப்படுத்துவதற்காக, நீண்ட இழுபறிக்குப்பின், மின் கம்பங்கள் அகற்றும் பணி துவங்கியுள்ளது.உடுமலை தங்கம்மாள் ஓடையை ஆக்கிரமித்து, ஏராளமான வீடுகள் அமைந்திருந்தன. அதோடு, பொள்ளாச்சி ரோட்டையும், தளி ரோடு, குட்டைத்திடல் பகுதியை இணைக்கும் பிரதான வழித்தடமாகவும் இருந்ததால், போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.இதற்கு தீர்வு காணும் வகையில், 5

உடுமலை:உடுமலை தங்கம்மாள் ஓடை அகலப்படுத்துவதற்காக, நீண்ட இழுபறிக்குப்பின், மின் கம்பங்கள் அகற்றும் பணி துவங்கியுள்ளது.உடுமலை தங்கம்மாள் ஓடையை ஆக்கிரமித்து, ஏராளமான வீடுகள் அமைந்திருந்தன. அதோடு, பொள்ளாச்சி ரோட்டையும், தளி ரோடு, குட்டைத்திடல் பகுதியை இணைக்கும் பிரதான வழித்தடமாகவும் இருந்ததால், போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.இதற்கு தீர்வு காணும் வகையில், 5 ஆண்டுக்கு முன், ஓடையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகள் அகற்றப்பட்டன.கடந்த ஆண்டு, மத்திய அரசு நிதிக்குழு மானியத்திட்டத்தின் கீழ், 48 லட்சம் ரூபாய் செலவில், பொள்ளாச்சி ரோடு சந்திப்பு முதல் தலைகொண்டம்மன் கோவில் வரை, 300 மீட்டர் நீளத்திற்கு ரோடு அகலப்படுத்தும் பணியும், வெள்ள காலங்களில் பாதிப்பு ஏற்படாத வகையில், ஓடை கரையில், வெள்ளத்தடுப்புச்சுவர் கட்டும் பணி துவங்கியது.ஆனால், முழுமையாக ஓடையின் நீர் வழித்தடம் மீட்கப்படாமல், பெயரளவிற்கு பணி மேற்கொள்ளப்பட்டது. ஓடை அகலம் அதிகமாக இருக்கும் நிலையில், நீர் வழித்தடத்தை குறுக்கியும், நேராக அமைக்காமல் வளைவுகளுடனும் தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டது. ஓடையை முழுமையாக அளவீடு செய்து, ஓடையை அகலப்படுத்தி, இரு கரையையும் அடையாளம் கண்டு, அதற்குப்பிறகு தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும்; முழுமையாக ஆழப்படுத்த வேண்டும், என கூறி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, ஓடை முழுமையாக அளவீடு செய்து, கான்கிரீட் கரை மற்றும் ரோடு அமைக்கப்படும் என, அப்போது நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.பணி நிறுத்தப்பட்டு, ஒரு ஆண்டுக்கும் மேலாகியும் பணி கிடப்பில் போடப்பட்டது. மின் கம்பங்கள் அகற்றாததால், பணி துவங்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்து வந்தனர்.இந்நிலையில், தற்போது, தங்கம்மாள் ஓடையில், மின் கம்பங்கள் மாற்றி அமைக்கப்பட்டு, ரோட்டின் மத்தியிலிருந்த பழைய மின் கம்பங்கள் அகற்றம் பணி நடந்து வருகிறது.தங்கம்மாள் ஒடையை முழுமையாக அளவீடு செய்து, துார்வாரி, மண் மேடுகளை அகற்றி ஆழப்படுத்தவும், வெள்ள தடுப்புச்சுவர் மற்றும் ரோடு அகலப்படுத்தும் பணியை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X