பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளிகளில் சுத்தம் அவசியம்; ஆசிரியர்களுக்கு 'அட்வைஸ்'

Added : அக் 13, 2021
Share
Advertisement
வால்பாறை:வால்பாறை ஒன்றியத்துக்கு உட்பட்ட அனைத்துப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கான கூட்டம் நடந்தது. துாய இருதய மகளிர் மேல்நிலைப்பள்ளி கலையரங்கில் நடந்த கூட்டத்துக்கு, வட்டார கல்வி அலுவலர்கள் காளிமுத்து, யோகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியை மோனிகா வரவேற்றார்.கூட்டத்தில், ஒருங்கிணைந்த பள்ளி கல்வி வளர்ச்சி திட்ட ஒருங்கிணைப்பாளர்

வால்பாறை:வால்பாறை ஒன்றியத்துக்கு உட்பட்ட அனைத்துப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கான கூட்டம் நடந்தது. துாய இருதய மகளிர் மேல்நிலைப்பள்ளி கலையரங்கில் நடந்த கூட்டத்துக்கு, வட்டார கல்வி அலுவலர்கள் காளிமுத்து, யோகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியை மோனிகா வரவேற்றார்.கூட்டத்தில், ஒருங்கிணைந்த பள்ளி கல்வி வளர்ச்சி திட்ட ஒருங்கிணைப்பாளர் பெல்ராஜ் கலந்து கொண்டு பேசியதாவது:நவ., முதல் தேதியில், அனைத்துப்பள்ளிகளும் திறக்கப்படவுள்ளன. அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும், பள்ளி கல்வித்துறை செய்து வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு பின், பள்ளிகள் திறப்பதால், சுகாதாரமான முறையில் பராமரிக்க வேண்டும்.பள்ளியில், கைகழுவும் வகையில் வாஷ்பேசின், வகுப்பறைகள், கழிவறைகள் உள்ளிட்டவைகளை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்க வேண்டும்.வகுப்பறை முழுவதும் பள்ளி திறப்பதற்கு முன், நகராட்சி சார்பில் கிருமிநாசினி தெளிக்க வேண்டும். பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு, எந்த இடர்பாடும் இல்லாத வகையில் பள்ளிகளை ஆசிரியர்கள் துாய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும்.இவ்வாறு, தெரிவித்தார்.ஒருங்கிணைந்த பள்ளி கல்வி வளர்ச்சித் திட்ட, வால்பாறை ஒன்றிய வள மைய பொறுப்பாளர் பிரதீபா நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X