பொது செய்தி

தமிழ்நாடு

கொசு உற்பத்தியை அழிக்க கிராமத்தில் மருந்து தெளிப்பு

Added : அக் 13, 2021
Share
Advertisement
கிணத்துக்கடவு:கோதவாடியில், கொசு உற்பத்தியை அழிக்க, வீடுவீடாக சென்று, டயர், தொட்டிகளில் தேங்கியிருக்கும் மழை நீரை அகற்றி, மருந்து தெளிக்கும் பணியில் சுகாதார பணியாளர்கள் ஈடுபட்டனர்.கிணத்துக்கடவு பகுதியில், தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்ததை விட குறைவாக பெய்துள்ளது. இருப்பினும், கிடைத்த மழையை பயன்படுத்தி, மானாவாரியில் சோளம், கம்பு, கொள்ளு விதைப்பு பணி

கிணத்துக்கடவு:கோதவாடியில், கொசு உற்பத்தியை அழிக்க, வீடுவீடாக சென்று, டயர், தொட்டிகளில் தேங்கியிருக்கும் மழை நீரை அகற்றி, மருந்து தெளிக்கும் பணியில் சுகாதார பணியாளர்கள் ஈடுபட்டனர்.கிணத்துக்கடவு பகுதியில், தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்ததை விட குறைவாக பெய்துள்ளது. இருப்பினும், கிடைத்த மழையை பயன்படுத்தி, மானாவாரியில் சோளம், கம்பு, கொள்ளு விதைப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.இந்நிலையில், ஆங்காங்கே தேங்கி நிற்கும் மழை நீர் மற்றும் சாக்கடை நீரால், கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது. கொசுக்கடியால் மக்களுக்கு நோய் பாதிப்பு ஏற்படலாம் என்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஊராட்சிகளில் கொசு ஒழிப்பு மருந்து தெளிப்பு துவங்கியுள்ளது.நல்லட்டிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தை சேர்ந்த சுகாதார பணியாளர்கள், ஒன்பது பேர் அடங்கிய குழு, கிராமங்களில் நேற்று பணியை துவக்கியது.கோதவாடி கிராமத்தில், வீடுவீடாக சென்று, வீட்டின் வெளியில் உள்ள, தொட்டிகள், டயர்கள், தேவையில்லாத பொருள்களில் தேங்கிய மழை நீரை அகற்றி சுத்தப்படுத்தினர். அப்பகுதிகளில் கொசு உற்பத்தியாகாமல் இருக்க மருந்து தெளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில், ஊராட்சி தலைவர் ரத்தினசாமி மற்றும் ஊராட்சி உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X