பொது செய்தி

தமிழ்நாடு

பட்டாசு கடை வைக்க ஆய்வு

Added : அக் 13, 2021
Share
Advertisement
கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு தாலுகாவில், பட்டாசு கடை வைக்க விண்ணப்பித்தவர்களின் இடங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில், பட்டாசு விற்பனை மையங்கள் அமைக்க, பலர் விண்ணப்பித்துள்ளனர். கிணத்துக்கடவு, வடசித்துார், காட்டம்பட்டி, நல்லட்டிபாளையம், சொலவம்பாளையம், வடபுதுார் பகுதிகளில் இருந்து, 17 பேர் விண்ணப்பித்தனர்.பரிசீலிக்கப்பட்ட

கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு தாலுகாவில், பட்டாசு கடை வைக்க விண்ணப்பித்தவர்களின் இடங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில், பட்டாசு விற்பனை மையங்கள் அமைக்க, பலர் விண்ணப்பித்துள்ளனர். கிணத்துக்கடவு, வடசித்துார், காட்டம்பட்டி, நல்லட்டிபாளையம், சொலவம்பாளையம், வடபுதுார் பகுதிகளில் இருந்து, 17 பேர் விண்ணப்பித்தனர்.பரிசீலிக்கப்பட்ட விண்ணப்பங்களுடன், சப் - கலெக்டர் தாக்கரே சுபம் ஞானதேவ் நேரில் சென்று, பட்டாசு கடை வைக்கும் இடங்களையும், பாதுகாப்பையும் ஆய்வு செய்தார். இதில், கிணத்துக்கடவு மற்றும் நல்லட்டிபாளையத்தை சேர்ந்த மூவரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.ஆய்வின்போது, கிணத்துக்கடவு தாசில்தார் சசிரேகா, ஆர்.ஐ., லலிதா, வி.ஏ.ஓ.,க்கள் விமல் மாதவன், வாசுதேவ் ஆகியோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X