பயங்கரவாதிகளுக்கு எதிரான வேட்டை; காஷ்மீரில் ஐந்து பேர் சுட்டுக் கொலை

Updated : அக் 13, 2021 | Added : அக் 13, 2021 | கருத்துகள் (13)
Share
Advertisement
ஜம்மு: ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிரான வேட்டையில் ஐந்து பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.ஜம்மு - காஷ்மீரில் கடந்த சில நாட்களாக அப்பாவி மக்களை குறி வைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். கடந்த வாரத்தில் தெருவோர வியாபாரி உட்பட ஏழு பொது மக்கள் கொல்லப்பட்டனர். நேற்று முன்தினம் பயங்கரவாதிகளுடன் நடந்த சண்டையில் ஐந்து ராணுவ அதிகாரிகள்
Kashmir, Terrorist, GunShot

ஜம்மு: ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிரான வேட்டையில் ஐந்து பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

ஜம்மு - காஷ்மீரில் கடந்த சில நாட்களாக அப்பாவி மக்களை குறி வைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். கடந்த வாரத்தில் தெருவோர வியாபாரி உட்பட ஏழு பொது மக்கள் கொல்லப்பட்டனர். நேற்று முன்தினம் பயங்கரவாதிகளுடன் நடந்த சண்டையில் ஐந்து ராணுவ அதிகாரிகள் வீர மரணம் அடைந்தனர். இதையடுத்து பயங்கரவாதிகளுக்கு எதிரான வேட்டையில் பாதுகாப்புப் படைகள் இறங்கியுள்ளன.தெற்கு காஷ்மீரின் ஷோபியான் மாவட்டத்தில் அடுக்குமாடி குடியிருப்புக்குள் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் நேற்று சுற்றி வளைக்கப்பட்டனர்.


latest tamil news


அதில் எதிர்ப்புப் படை என்ற பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த மூன்று பேர் கொல்லப் பட்டனர்.பயங்கரவாதிகளை வெளியே வரவழைக்க பாதுகாப்புப் படையினர் குண்டுகளை வீசியதில், இரண்டு வீடுகள் சேதம் அடைந்தன.இதற்கிடையே ஷோபியான் மாவட்டத்தில் நடந்த மற்றொரு தாக்குதலில் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rpalnivelu - Bangalorw,இந்தியா
13-அக்-202114:56:42 IST Report Abuse
Rpalnivelu இங்கே ஹிந்துக்களை மறு குடியமர்த்தி முசுலீமுகளை மைனாரிடிகளாக ஆக்க அமித் ஷா முயற்சிக்கிறார் அதணை முறியடிப்போம். என்று கொக்கரிக்கிறார் பாருக் அப்துல்லா
Rate this:
Cancel
GANESUN - Delhi,இந்தியா
13-அக்-202112:28:12 IST Report Abuse
GANESUN இன்றைய பெட்ரோல், தங்கம், தளபதி போட்டோ ஷுட் போல தினமும் விடாது சொர்க்கத்தின் கன்னியர்களிடம் அனுப்பிக் கொண்டு இருந்தால் தான்..சுத்தமாகும்.
Rate this:
Cancel
Anand - chennai,இந்தியா
13-அக்-202112:09:22 IST Report Abuse
Anand எமது ராணுவ வீரர்களுக்கு பாராட்டுக்கள்.... திருட்டு திராவிஷம் மற்றும் அதன் கூட்டு களவாணிகள் வயிறு எரிந்து சாகட்டும்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X