பொது செய்தி

தமிழ்நாடு

பொதுமக்களுக்கு பயன்படாத எம்.எல்.ஏ.,வின் ஆம்புலன்ஸ்

Added : அக் 13, 2021
Share
Advertisement
வால்பாறை;அரசு மருத்துவமனைக்கு எம்.எல்.ஏ., வழங்கிய ஆம்புலன்ஸ் வீதிக்கு வந்ததால், மக்கள் கவலையடைந்துள்ளனர்.வால்பாறை எம்.எல்.ஏ., அமுல்கந்தசாமி, மலைப்பகுதி மக்கள் பயன்பாட்டிற்காக தனது சொந்த செலவில், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு, கடந்த இரண்டு மாதத்துக்கு முன் ஆம்புலன்ஸ் வழங்கினார்.ஆனால், அந்த ஆம்புலன்ஸ் மக்கள் பயன்பாட்டிற்கு வராமல், டாக்சி ஸ்டாண்டில், வாகனத்தோடு,

வால்பாறை;அரசு மருத்துவமனைக்கு எம்.எல்.ஏ., வழங்கிய ஆம்புலன்ஸ் வீதிக்கு வந்ததால், மக்கள் கவலையடைந்துள்ளனர்.வால்பாறை எம்.எல்.ஏ., அமுல்கந்தசாமி, மலைப்பகுதி மக்கள் பயன்பாட்டிற்காக தனது சொந்த செலவில், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு, கடந்த இரண்டு மாதத்துக்கு முன் ஆம்புலன்ஸ் வழங்கினார்.ஆனால், அந்த ஆம்புலன்ஸ் மக்கள் பயன்பாட்டிற்கு வராமல், டாக்சி ஸ்டாண்டில், வாகனத்தோடு, வாகனமாக நிற்கிறது. தொகுதி எம்.எல்.ஏ., மக்கள் பயன்பாட்டிற்காக வழங்கிய ஆம்புலன்ஸ் காட்சிப்பொருளாக மாறி வருவதால், மக்கள் கவலையடைந்துள்ளனர்.எம்.எல்.ஏ.,விடம் கேட்டபோது, ''வால்பாறை மலைப்பகுதி மக்கள் பயன்பாட்டிற்காக, அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் வழங்கியுள்ளேன். அதை இயக்க டிரைவரும் உள்ளார். டாக்சி ஸ்டாண்டில் ஆம்புலன்ஸ் நிறுத்தப்படுவது எனக்கு தெரியாது. நாளை முதல் அரசு மருத்துவமனையின் முன் நிறுத்தப்படும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X