அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஆர்.வேலுாரில் அ.தி.மு.க., வெற்றி: எடுபடாத அமைச்சர்கள் பிரசாரம்

Added : அக் 13, 2021
Share
Advertisement
உடுமலை;உடுமலை ஒன்றியம், ஆர்.வேலுார் ஊராட்சித்தலைவருக்கான இடைத்தேர்தல், கடந்த, 9ல் நடந்தது. மொத்தமுள்ள, 1,213 ஓட்டுக்களில், ஆண்கள், 408 பேர், பெண்கள், 510 பேர் என, 959 பேர் ஓட்டுப்பதிவு செய்திருந்தனர்.நேற்று காலை, உடுமலை ஒன்றிய அலுவலகத்தில், ஓட்டு எண்ணிக்கை நடந்தது. பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, கட்சியினர், ஆதரவாளர்கள் அலுவலகத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை. கம்பி வலை

உடுமலை;உடுமலை ஒன்றியம், ஆர்.வேலுார் ஊராட்சித்தலைவருக்கான இடைத்தேர்தல், கடந்த, 9ல் நடந்தது. மொத்தமுள்ள, 1,213 ஓட்டுக்களில், ஆண்கள், 408 பேர், பெண்கள், 510 பேர் என, 959 பேர் ஓட்டுப்பதிவு செய்திருந்தனர்.நேற்று காலை, உடுமலை ஒன்றிய அலுவலகத்தில், ஓட்டு எண்ணிக்கை நடந்தது. பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, கட்சியினர், ஆதரவாளர்கள் அலுவலகத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை. கம்பி வலை அமைக்கப்பட்டு, ஓட்டுச்சீட்டுக்கள் இருந்த, பெட்டிகள் திறக்கப்பட்டது.மூன்று ஓட்டுச்சாவடிகள், மூன்று சுற்றுக்களாக ஓட்டு எண்ணிக்கை நடந்தது. இதில், அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்ட, அன்னலட்சுமி, 460 ஓட்டுக்களும், தி.மு.க., சார்பில் போட்டியிட்ட, கலாமணி, 417 ஓட்டுக்களும், சுயேட்சை வேட்பாளர், உமா, 77 ஓட்டுக்களும் பெற்றனர்.மூன்று வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில், மூன்று சின்னத்திற்கும் ஓட்டுப்பதிவு செய்திருந்தது, இருவருக்கு ஓட்டுப்பதிவு செய்தது, ஒருவருக்குமே ஓட்டுப்போடாதது என, 5 ஓட்டுக்கள் செல்லாததாக அறிவிக்கப்பட்டது.இதனையடுத்து, 43 ஓட்டுக்கள் வித்தியாசத்தில், அன்னலட்சுமி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அவருக்கு, வெற்றி பெற்றதற்கான சான்றிதழை, ஒன்றிய ஆணையாளர் மணிகண்டன் வழங்கினார். தி.மு.க., சார்பில், போட்டியிட்ட கலாமணிக்கு, ஆதரவாக அமைச்சர்கள், சாமிநாதன், கயல்விழி, எம்.பி., சண்முகசுந்தரம் உள்ளிட்டோர் பிரசாரம் மேற்கொண்ட நிலையில், அ.தி.மு.க., வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.ஏற்கெனவே, தி.மு.க., வைச்சேர்ந்த மனோன்மணி, தலைவராக வெற்றி பெற்று, அவர் இறந்ததால். ஆர்.வேலுார் ஊராட்சித்தலைவருக்கு இடைத்தேர்தல் நடந்தது. அதில், தற்போது ஊராட்சித்தலைவர் பதவி எதிர்க்கட்சியான அ.தி.மு.க., வசமாகியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X