சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பாறைக்குழியில் இறந்த எருமையை வீச முயற்சி: ஊராட்சி நிர்வாகம் ரூ.20,000 அபராதம் விதிப்பு

Added : அக் 13, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி;பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய, ஊராட்சி பகுதியில், கேரள மாநிலத்தில் இருந்து கொண்டு வந்த இறந்த எருமையை வீச முயன்ற லாரி டிரைவருக்கு, 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.பொள்ளாச்சி தெற்கு ஒன்றியம், கஞ்சம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கே.நாகூர் புறம்போக்கு பாறைக்குழியில், லாரியில் கொண்டு வந்த இறந்த எருமையின் உடலை நேற்று சிலர் வீச முயன்றுள்ளனர்.இதைக்கண்ட

பொள்ளாச்சி;பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய, ஊராட்சி பகுதியில், கேரள மாநிலத்தில் இருந்து கொண்டு வந்த இறந்த எருமையை வீச முயன்ற லாரி டிரைவருக்கு, 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.பொள்ளாச்சி தெற்கு ஒன்றியம், கஞ்சம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கே.நாகூர் புறம்போக்கு பாறைக்குழியில், லாரியில் கொண்டு வந்த இறந்த எருமையின் உடலை நேற்று சிலர் வீச முயன்றுள்ளனர்.இதைக்கண்ட பொதுமக்கள், அவர்களை மடக்கி பிடித்து, ஊராட்சி நிர்வாகம் மற்றும் கோமங்கலம் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.விசாரணையில், தேனி மாவட்டம், கம்பம், உத்தமபாளையத்தை சேர்ந்த கொடித்துரை என்பவருக்கு சொந்தமான லாரி என்பது தெரியவந்தது. சில நாட்களுக்கு முன் ஆந்திர மாநிலத்தில் இருந்து, 16 எருமைகளை ஏற்றிக்கொண்டு கேரள மாநிலத்துக்கு சென்றுள்ளது.செல்லும் வழியில், ஒரு எருமை இறந்து விட்டது. உயிருள்ள எருமைகளை கேரளாவில் விற்பனை செய்துள்ளனர். ஆனால், இறந்த எருமையை கேரளாவில் அப்புறப்படுத்த அனுமதிக்காததால், திரும்பிச் செல்லும் வழியில் வீசிச் செல்ல திட்டமிட்டு தமிழகம் திரும்பியுள்ளனர்.ஆள் நடமாட்டம் குறைவான பகுதியில் வீச முயன்ற போது, மக்களிடம் மாட்டிக் கொண்டதும், விசாரணையில் தெரியவந்தது.இதையடுத்து, லாரியை ஓட்டி வந்த கண்ணனிடம், ஊராட்சி தலைவர் மனோன்மணி, 20 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலித்தார். மேலும், இறந்த எருமையை எங்கும் வீசிச் செல்லக்கூடாது; திருப்பி எடுத்துச் சென்று முறைப்படி புதைக்க வேண்டும், என, போலீசார் எச்சரித்து அனுப்பினர்.கேரளாவில் இருந்து இறைச்சிக்கழிவுகள் உள்ளிட்ட பல்வேறு கழிவுகளை, லாரிகளில் கொண்டு வந்து, பொள்ளாச்சி பகுதியில் வீசிச்செல்வது தொடர்கதையாகியுள்ள நிலையில், கஞ்சம்பட்டி ஊராட்சி நிர்வாகம் அபராதம் விதித்தது மற்ற ஊராட்சிகளுக்கும் சிறந்த முன்னுதாரணமாக உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X