பொது செய்தி

தமிழ்நாடு

காஸ் சிலிண்டர் நிறுவனத்தில் தத்ரூபமாக தீ தடுப்பு ஒத்திகை

Added : அக் 13, 2021
Share
Advertisement
நெகமம்:நெகமம், பெரியகளந்தையில் செயல்படும், 'இன்டேன்' நிறுவனத்தின் சிலிண்டரில் காஸ் நிரப்பும் பிரிவில், தீத்தடுப்பு மற்றும் முதலுதவி ஒத்திகை நடந்தது.நெகமம், பெரியகளந்தையில் 'இன்டேன்' நிறுவனத்தின், சிலிண்டரில் காஸ் நிரப்பும் பிரிவு செயல்படுகிறது. இங்கு, காஸ் நிரப்பப்பட்ட சிலிண்டர்கள், கோவை, மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, வால்பாறை மற்றும் ஈரோடு, திருப்பூர்,

நெகமம்:நெகமம், பெரியகளந்தையில் செயல்படும், 'இன்டேன்' நிறுவனத்தின் சிலிண்டரில் காஸ் நிரப்பும் பிரிவில், தீத்தடுப்பு மற்றும் முதலுதவி ஒத்திகை நடந்தது.நெகமம், பெரியகளந்தையில் 'இன்டேன்' நிறுவனத்தின், சிலிண்டரில் காஸ் நிரப்பும் பிரிவு செயல்படுகிறது. இங்கு, காஸ் நிரப்பப்பட்ட சிலிண்டர்கள், கோவை, மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, வால்பாறை மற்றும் ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களுக்கும், கேரள மாநிலத்துக்கும் லாரிகள் வாயிலாக கொண்டு செல்லப்படுகின்றன.இந்நிறுவனத்தில், நேற்று தீத்தடுப்பு ஒத்திகை நடந்தது. அப்போது, காஸ் நிரப்பும் இடத்தில் இருந்து, அபாய சங்கு ஒலித்ததும் அதிகாரிகள், ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.உடனடியாக, கிணத்துக்கடவு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், காஸ் கசிவு மற்றும் தீ பரவிய இடத்தில் நவீன கருவிகள் வாயிலாக, தண்ணீரை பீய்ச்சி அடித்து, விபத்து ஏற்படாமல் தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.பணியாளர்கள் மீட்கப்பட்டு, முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மருத்துவமனைக்கு கொண்டு செல்வது போல, தத்ரூபமாக ஒத்திகை நடந்தது.ஒத்திகை நிகழ்வில், தொழில்பாதுகாப்பு மற்றும் சுகாதார இணைஇயக்குனர் சரவணன், முதுநிலை மேலாளர் சுந்தர் ஆகியோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X