பொது செய்தி

தமிழ்நாடு

அமராவதி சர்க்கரை ஆலையில் 1.08 லட்சம் டன் கரும்பு பதிவு

Added : அக் 13, 2021
Share
Advertisement
மடத்துக்குளம்:மடத்துக்குளம் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை, அடுத்த ஆண்டு அரவைக்கு இதுவரை, 1,08,000 டன் கரும்பு பதிவு செய்யப்பட்டுள்ளது.மடத்துக்குளம் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில், அரவை தொடங்கும் பல மாதங்களுக்கு முன்பிருந்தே, விவசாயிகளிடம் ஒப்பந்த முறையில், கரும்பு முன்பதிவு நடப்பது வழக்கம். பழநி, நெய்க்காரபட்டி, கொமரலிங்கம், கணியூர், மடத்துக்குளம், உடுமலை, பகுதி

மடத்துக்குளம்:மடத்துக்குளம் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை, அடுத்த ஆண்டு அரவைக்கு இதுவரை, 1,08,000 டன் கரும்பு பதிவு செய்யப்பட்டுள்ளது.மடத்துக்குளம் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில், அரவை தொடங்கும் பல மாதங்களுக்கு முன்பிருந்தே, விவசாயிகளிடம் ஒப்பந்த முறையில், கரும்பு முன்பதிவு நடப்பது வழக்கம். பழநி, நெய்க்காரபட்டி, கொமரலிங்கம், கணியூர், மடத்துக்குளம், உடுமலை, பகுதி விவசாயிகளிடம் இதுபோல் ஒப்பந்தம் செய்யப்படுகிறது.நடப்பு ஆண்டு இரண்டரை மாதம் அரவை நடந்த நிலையில், 63,560 டன் கரும்பு அரவை செய்து, 7.88 சதவீதம் சர்க்கரை கட்டு அடிப் படையில், 49,945 குவிண்டால் சர்க்கரை உற்பத்தி செய்யப்பட்டது.இதனைத்தொடர்ந்து அடுத்த ஆண்டு (2022) அரவைக்காக, 3,000 ஏக்கர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, சில மாதங்களுக்கு முன்பிருந்து, கரும்பு முன்பதிவு நடந்து வருகிறது. இதுவரை, ஒரு லட்சத்து 8 ஆயிரம் டன் கரும்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது, உத்தேசமாக, 2,700 ஏக்கர் பரப்பளவாகும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X