பொது செய்தி

தமிழ்நாடு

சிறு, குறு வணிகர், தொழில் முனைவோர் கருத்தரங்கம்: வங்கி கடன் திட்டங்கள் குறித்து விளக்கம்

Added : அக் 13, 2021
Share
Advertisement
உடுமலை;சிறு, குறு வணிகர்கள், தொழில் முனைவோர்,ஐந்து சதவீதம் என்ற குறைந்த மூலதன பங்குடன், எளிதாக கடன் பெறலாம் என, கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.உடுமலைதொழில் வர்த்தகசபை சார்பில், தொழில் முனைவோர் கருத்தரங்கம் நடந்தது.இந்நிகழ்ச்சியில், பொள்ளாச்சி எம்.பி., சண்முகசுந்தரம் பேசுகையில், ''உடுமலை பகுதிகளில் தொழில் மற்றும் வர்த்தகத்துறை முன்னேற்றத்திற்கு, இது போன்ற

உடுமலை;சிறு, குறு வணிகர்கள், தொழில் முனைவோர்,ஐந்து சதவீதம் என்ற குறைந்த மூலதன பங்குடன், எளிதாக கடன் பெறலாம் என, கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.உடுமலைதொழில் வர்த்தகசபை சார்பில், தொழில் முனைவோர் கருத்தரங்கம் நடந்தது.இந்நிகழ்ச்சியில், பொள்ளாச்சி எம்.பி., சண்முகசுந்தரம் பேசுகையில், ''உடுமலை பகுதிகளில் தொழில் மற்றும் வர்த்தகத்துறை முன்னேற்றத்திற்கு, இது போன்ற கருத்தரங்குகள் நடத்தப்படும். மத்திய, மாநில அரசுகள் சார்பில், ஏராமான திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. இவற்றை இளம் தொழில் முனைவோர், சிறு, குறு, தொழில் நிறுவனங்கள், வர்த்தகர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். உடுமலை தொழில் வர்த்தக சபை சார்பில், அரசு தொழில் ஊக்குவிப்பு திட்டங்கள் குறித்து அறிந்து கொள்ள சிறப்பு ஏற்பாடு செய்யப்படும்'' என்றார்.திருப்பூர் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் கண்ணன், மத்திய, மாநில அரசுகளின் தொழில் ஊக்குவிப்பு திட்டங்கள், மானியத்திட்டங்கள் குறித்து விளக்கினார்.கோவை சிட்கோ மேலாளர் சர்மிளா, பேசுகையில், ''உடுமலையில் தொழில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில், அரசு திட்டங்கள், தனியார் பங்களிப்புடன் கூடிய தொழில் வர்த்தக மையங்கள் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.திருப்பூர் மாவட்ட தொழில் மையம் (டிக்) மேலாளர் சுந்தரேசன், சிறு, குறு தொழில் நிறுவனங்கள் பதிவு செய்வதன் அவசியம், கடன் வசதி பெறுவதற்கான வழிகள் குறித்து விளக்கினார்.மாவட்ட முன்னோடி வங்கியான கனரா வங்கி மேலாளர் அலெக்சாண்டர், சிறு, குறு வணிகர்கள், தொழில் முனைவோர், ஐந்து சதவீதம் என்ற குறைந்த மூலதன பங்குடன், இணை பாதுகாப்பு சொத்து ஏதும் இல்லாத வகையிலான வங்கிக்கடன் வாங்கும் திட்டங்கள், குறைந்த கால பயிற்சிகள், இளைஞர்கள் சுயமாக தொழில் துவங்க, வங்கிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ள பரிந்துரைகள் குறித்து விளக்கினார்.தொழில் வர்த்தக சபை தலைவர் அருண்கார்த்திக், செயலாளர் கந்தசாமி, நிர்வாகிகள் மற்றும் 70க்கும்மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X