அன்று குழாய் ஆபரேட்டர்; இன்று ஊராட்சி தலைவர்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

அன்று குழாய் ஆபரேட்டர்; இன்று ஊராட்சி தலைவர்

Added : அக் 13, 2021
Share
அவிநாசி:கருவலுார் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கான இடைத்தேர்தலில், அதே ஊராட்சியில், குடிநீர் குழாய் ஆபரேட்டராக பணிபுரிந்தவர், வெற்றி பெற்று தலைவரானார்.திருப்பூர் மாவட்டம், அவிநாசி ஒன்றியம், கருவலுார்ஊராட்சி மன்ற தலைவராகஇருந்த மாரிமுத்து, கடந்தாண்டு உடல் நலக்குறைவால்இறந்தார். அதே ஊராட்சியில், 10 ஆண்டுகளாக, பம்ப் ஆபரேட்டராக பணிபுரிந்த முருகன், தனது வேலையை ராஜினாமா

அவிநாசி:கருவலுார் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கான இடைத்தேர்தலில், அதே ஊராட்சியில், குடிநீர் குழாய் ஆபரேட்டராக பணிபுரிந்தவர், வெற்றி பெற்று தலைவரானார்.திருப்பூர் மாவட்டம், அவிநாசி ஒன்றியம், கருவலுார்ஊராட்சி மன்ற தலைவராகஇருந்த மாரிமுத்து, கடந்தாண்டு உடல் நலக்குறைவால்இறந்தார். அதே ஊராட்சியில், 10 ஆண்டுகளாக, பம்ப் ஆபரேட்டராக பணிபுரிந்த முருகன், தனது வேலையை ராஜினாமா செய்து தேர்தலில் போட்டியிட்டார்.அவருக்கு, தி.மு.க., கூட்டணி ஆதரவளித்தது. அ.தி.மு.க., கூட்டணி ஆதரவு வேட்பாளராக முருகேசன் போட்டியிட்டார். இதில் முருகன், 1,571 ஓட்டு பெற்று வெற்றி பெற்றார். அவருக்கு அடுத்தபடியாக முருகேசன் 1,337 ஓட்டுகள் பெற்றார்.முருகன் கூறுகையில், ''குடிநீர் குழாய் ஆபரேட்டராக, மக்களுக்கு நிறைவாக சேவை செய்தேன். அதனால், மக்களை என்னை வெற்றி பெற வைத்துள்ளனர். ஊராட்சி மக்களுக்கு அனைத்து வசதிகளை செய்து கொடுக்க முயற்சிப்பேன்,'' என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X