பொது செய்தி

தமிழ்நாடு

குந்தா அணையில் சகதி: மின் உற்பத்தி பாதிப்பு

Added : அக் 13, 2021
Share
Advertisement
ஊட்டி:குந்தா அணையில் அதிகரித்துள்ள சகதியால், இரு மின்நிலையங்களில், உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டம், குந்தா அணையில் தேக்கி வைக்கப்படும் தண்ணீரால் கெத்தையில் 175 மெகாவாட்; பரளியில் 180 மெகாவாட் மின் உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.குந்தா அணை பல ஆண்டுகளாக துார்வாரப்படவில்லை. மொத்த உயரம், 89 அடியில், பாதி அளவுக்கு சகதி நிறைந்துள்ளது. இதனால் குந்தாவில்

ஊட்டி:குந்தா அணையில் அதிகரித்துள்ள சகதியால், இரு மின்நிலையங்களில், உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டம், குந்தா அணையில் தேக்கி வைக்கப்படும் தண்ணீரால் கெத்தையில் 175 மெகாவாட்; பரளியில் 180 மெகாவாட் மின் உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.குந்தா அணை பல ஆண்டுகளாக துார்வாரப்படவில்லை. மொத்த உயரம், 89 அடியில், பாதி அளவுக்கு சகதி நிறைந்துள்ளது. இதனால் குந்தாவில் இருந்து கெத்தை அணைக்கு தண்ணீர் கொண்டு செல்லும் ராட்சத குழாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. தண்ணீர் கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.இரு மின்நிலையங்களில், மொத்தம், 355 மெகாவாட் உற்பத்தி மேற்கொள்ளும் திறன் உள்ள நிலையில், தற்போது தினசரி உற்பத்தி, 200 மெகாவாட்டாக குறைந்துள்ளது.மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில்,'குந்தா அணையில் தேங்கியுள்ள சகதி அடைப்பு குறித்து மின்வாரிய தலைமை அலுவலகத்துக்கு ஏற்கனவே அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. உயர் அதிகாரிகள் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X