பொது செய்தி

தமிழ்நாடு

'பெண் ஊழியர்களுக்கு உறுதுணையாக இருங்கள்'

Added : அக் 13, 2021
Share
Advertisement
சென்னை:''அலுவலகங்களில் பெண் ஊழியர்களுக்கு, ஆண் ஊழியர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்,'' என, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டல ஜி.எஸ்.டி., தலைமை கமிஷனர் எம்.வி.எஸ்.சவுத்ரி தெரிவித்துள்ளார்ராணுவத்தில் பெண்களுக்கான படைப்பிரிவில், ஜான்சிராணி பட்டாளம் ஏற்படுத்தப்பட்டது. அதைக் கொண்டாடும் விதமாக, மத்திய அரசு ஆண்டுதோறும் அக்., 12ல், பெண்களை கவுரவித்து வருகிறது.மேலும்

சென்னை:''அலுவலகங்களில் பெண் ஊழியர்களுக்கு, ஆண் ஊழியர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்,'' என, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டல ஜி.எஸ்.டி., தலைமை கமிஷனர் எம்.வி.எஸ்.சவுத்ரி தெரிவித்துள்ளார்ராணுவத்தில் பெண்களுக்கான படைப்பிரிவில், ஜான்சிராணி பட்டாளம் ஏற்படுத்தப்பட்டது. அதைக் கொண்டாடும் விதமாக, மத்திய அரசு ஆண்டுதோறும் அக்., 12ல், பெண்களை கவுரவித்து வருகிறது.மேலும் நாட்டின், 75வது சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு, மத்திய மறைமுக வரி மற்றும் சுங்க வாரியமும் இணைந்து, பெண் தொழிலதிபர்களை கவுரவப்படுத்தும் நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன.சென்னை தெற்கு ஜி.எஸ்.டி., கமிஷனர் சுதா கோகா அலுவலகத்தில் பணிபுரியும் பெண் அதிகாரிகள் மற்றும் பெண் தொழிலதிபர்கள் கவுரவப்படுத்தும் நிகழ்ச்சி, நுங்கம்பாக்கத்தில் உள்ள, வருமான வரித்துறை அலுவலகத்தில் நேற்று நடந்தது.இதில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டல ஜி.எஸ்.டி., தலைமை கமிஷனர் சவுத்ரி, ''நிர்வாகத்தில் ஆண்களை விட, பெண்களே மிகவும் சிறந்தவர்களாக உள்ளனர். அலுவலகங்களில் பெண் ஊழியர்களுக்கு, ஆண் ஊழியர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்,'' என்று பேசினார்.நிகழ்ச்சியில், 14 பெண் தொழிலதிபர்கள் கவுரவிக்கப்பட்டனர். இதில், வருமான வரி முதன்மை கமிஷனர் ஜஹான் சேப் அக்தர், சென்னை வடக்கு ஜி.எஸ்.டி., கமிஷனர் பார்த்திபன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X