சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நக்சல் ஆதரவாளர்கள் வீடுகளில் 'ரெய்டு': கோவையில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் 'அதிரடி'

Added : அக் 13, 2021
Share
Advertisement
கோவை;கோவையில் மூன்று இடங் களில் மாவோயிஸ்ட் ஆதரவாளர்களின் வீடுகளில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் நேற்று அதிகாலை முதல் சோதனையில் ஈடுபட்டனர்.கேரளா மாநிலம், மலப்புறம் மாவட்டம் நிலம்பூரில், கடந்த சில நாட்களுக்கு முன், மாவோயிஸ்ட் ஒருவர் கைது செய்யப்பட்டார். இவருடன் தொடர்பில் இருந்ததாக சந்தேகப்படும் தமிழகம், கேரளா மற்றும் ஆந்திரா பகுதிகளை சேர்ந்த நபர்களின் வீடுகள் உள்பட, 23

கோவை;கோவையில் மூன்று இடங் களில் மாவோயிஸ்ட் ஆதரவாளர்களின் வீடுகளில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் நேற்று அதிகாலை முதல் சோதனையில் ஈடுபட்டனர்.கேரளா மாநிலம், மலப்புறம் மாவட்டம் நிலம்பூரில், கடந்த சில நாட்களுக்கு முன், மாவோயிஸ்ட் ஒருவர் கைது செய்யப்பட்டார். இவருடன் தொடர்பில் இருந்ததாக சந்தேகப்படும் தமிழகம், கேரளா மற்றும் ஆந்திரா பகுதிகளை சேர்ந்த நபர்களின் வீடுகள் உள்பட, 23 இடங்களில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் நேற்று அதிகாலை திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.இதன்தொடர்ச்சியாக, கோவையிலும் மூன்று இடங்களில் நேற்று அதிகாலை, 6:00 மணி முதல் சோதனை நடத்தப்பட்டது.கோவை, புலியகுளம், ஏரிமேட்டை சேர்ந்த பல் டாக்டர் தினேஷ், 36, வீட்டில் அதிகாரிகள் சோதனையிட்டனர். இவர் இடையர்பாளையம் பகுதியில் மருத்துவமனை வைத்து நடத்தி வந்தார். இவரது வீட்டில் கடந்தாண்டு பிப்., மாதம் கேரளா மாநில பயங்கரவாத தடுப்பு பிரிவினர் சோதனையிட்டனர்.அப்போது அவரது வீட்டில் இருந்த மாவோயிஸ்ட் தொடர்பான பல்வேறு ஆவணங்களை கைப்பற்றினர். பின், டாக்டர் தினேஷ் கைது செய்யப்பட்டு, கேரளா சிறையில் அடைக்கப்பட்டார். இவரிடம் நடத்திய விசாரணையில் கோவை, சுங்கம், காமராஜர் வீதியை சேர்ந்த டேனிஷ், 32 என்பவரும் மாவோயிஸ்ட் ஆதரவாளராக செயல்பட்டது தெரியவந்தது.இதையடுத்து, கேரளாவில் பதுங்கியிருந்தவரை கேரளா பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.இந்நிலையில் நேற்று கேரளாவில் இருந்து வந்திருந்த என்.ஐ.ஏ., அதிகாரிகள் மூன்று பிரிவுகளாக பிரிந்து டாக்டர் தினேஷ், டேனிஷ் மற்றும் பொள்ளாச்சி, அங்கலக்குறிச்சியை சேர்ந்த சந்தோஷ் ஆகியோரின் வீடுகளில் திடீர் சோதனையிட்டனர்.டாக்டர் தினேஷ் மற்றும் டேனிஷ் ஆகியோரின் வீடுகளுக்கு தலா எட்டு பேர் கொண்ட என்.ஐ.ஏ., குழுவினர் சோதனை நடத்தினர். இந்த சோதனை நேற்று மாலை வரை தொடர்ந்து நீடித்தது. சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து என்.ஐ.ஏ., அதிகாரிகள் எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை.சிம்கார்டு, பென்டிரைவ்பறிமுதல்கோவை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மாவோயிஸ்ட் ஆதரவாளர்கள் வீடுகளில் நடந்த சோதனையில் பல்வேறு ஆவணங்களை என்.ஐ.ஏ., அதிகாரிகள் கைப்பற்றினர்.என்.ஐ.ஏ., நேற்று வெளியிட்ட அறிக்கை:கேரளா நிலம்பூரில் மாவோயிஸ்ட் கைது செய்யப்பட்டதன் தொடர்ச்சியாக, தமிழகம், கேரளா, கர்நாடகாவில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் மாவோயிஸ்ட் ஆதரவாளர்கள் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. கோவையை சேர்ந்த தினேஷ், டேனிஷ் உள்பட ஐந்து பேர் மீது கடந்த மே மாதம் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவர்களுடன் மற்ற, 20 பேர் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது.மொபைல்போன்கள், சிம் கார்டுகள், பென்டிரைவ், நக்சல் ஆதரவு புத்தகங்கள், நோட்டீஸ் உள்பட பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.மாயமான நபர் 'மாவோயிஸ்ட்' ஆனார்!கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த அங்கலக்குறிச்சியை சேர்ந்தவர் சந்தோஷ், 37. இவர், 2014ல் காணாமல் போனதாக அவரது தந்தை அர்ஜுனன், ஆழியாறு போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தார்.இது குறித்து விசாரித்த போலீசார், மாவோயிஸ்ட் இயக்கத்தில் சந்தோஷ் இணைந்து, கேரள மாநிலம் வயநாடு பகுதியில் இருப்பதாகவும், தமிழக பகுதிகளில் உள்ளவர்களை மாவோயிஸ்ட் இயக்கத்தில் இணைக்கும் பணியில் ஈடுபட்டிருப்பதையும் கண்டறிந்தனர். இதையடுத்து, அவரது வீட்டில், கேரள மற்றும் தமிழக போலீசார் அவ்வப்போது, விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த பிப்., மாதம் கேரள போலீசார் சந்தோஷ் வீட்டில், அவரது பெற்றோரிடம், 'மாவோயிஸ்ட்கள் மறுவாழ்வு திட்டம்' குறித்து தெரிவித்தனர். மேலும், அவர் வீட்டுக்கு வந்து சென்றாரா என விசாரித்தனர்.இந்நிலையில், நேற்று, என்.ஐ.ஏ., அதிகாரிகள், சந்தோஷ் வீட்டில் ஆய்வு செய்தனர். காலை, 6:00 மணி முதல், 11:30 மணி வரை ஆய்வு செய்து, முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர். அவரது பெற்றோர், சகோதரி மற்றும் நண்பர்களிடம் விசாரித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X