சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குமரியில் தொடரும் மழை: 12 கிராமங்கள் துண்டிப்பு

Added : அக் 13, 2021
Share
Advertisement
நாகர்கோவில்:குமரி மாவட்ட மலையோரங்களில் மழை தொடர்வதால், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, தரைப்பாலம் மூழ்கி, 12 மலை கிராமங்கள் துண்டிக்கப்பட்டன.குமரி மாவட்டத்தில் மூன்று நாட்களாக, தொடர் மழை பெய்வதால் ரோடுகளிலும், ஆறுகளிலும் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது.மொத்தம் 48 அடி உயரம் கொண்ட

நாகர்கோவில்:குமரி மாவட்ட மலையோரங்களில் மழை தொடர்வதால், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, தரைப்பாலம் மூழ்கி, 12 மலை கிராமங்கள் துண்டிக்கப்பட்டன.குமரி மாவட்டத்தில் மூன்று நாட்களாக, தொடர் மழை பெய்வதால் ரோடுகளிலும், ஆறுகளிலும் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது.மொத்தம் 48 அடி உயரம் கொண்ட பேச்சிப்பாறை அணையில், நேற்று காலை 44.44 அடியாக நீர்மட்டம் இருந்தது. அணைக்கு வந்துக் கொண்டிருந்த 3,783 கன அடி தண்ணீரும் உபரி நீராக வெளியேற்றப்பட்டது. 77 அடி உயரம் கொண்ட பெருஞ்சாணி அணை நீர்மட்டம், நேற்று காலை 73.86 அடியாக இருந்தது.கோதையாறு நீர்மின் நிலைய அணைக்கு வரும் தண்ணீர், முழுமையாக வெளியேற்றப்பட்டு வருகிறது. ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, குற்றியாறு - மோதிர மலை ரோட்டில், தரை பாலத்தின் ஒரு பகுதி அடித்துச் செல்லப்பட்டது. இதனால், 12 கிராமங்கள் துண்டிக்கப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X