பொது செய்தி

தமிழ்நாடு

வறட்சியை தாங்கும் புதிய ரக வேம்பு: வனமரபியல் துறை ஆராய்ச்சி

Added : அக் 13, 2021
Share
Advertisement
திருப்பூர்;'வனத்துக்குள் திருப்பூர்' திட்டக்குழுவுடன் இணைந்து, 'வி.டி., - வேம்பு' என்ற புதிய விதை உருவாக்கத்துக்கான ஆராய்ச்சியை, வனமரபியல் ஆராய்ச்சி நிலையம் துவக்கியுள்ளது.திருப்பூர் 'வெற்றி' அமைப்பு சார்பில், 'வனத்துக்குள் திருப்பூர்' என்ற மரம் வளர்க்கும் திட்டம், 2015 முதல் நடைமுறையில் உள்ளது. இதுவரை, 11.70 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.விவசாயிகள், நீண்ட

திருப்பூர்;'வனத்துக்குள் திருப்பூர்' திட்டக்குழுவுடன் இணைந்து, 'வி.டி., - வேம்பு' என்ற புதிய விதை உருவாக்கத்துக்கான ஆராய்ச்சியை, வனமரபியல் ஆராய்ச்சி நிலையம் துவக்கியுள்ளது.திருப்பூர் 'வெற்றி' அமைப்பு சார்பில், 'வனத்துக்குள் திருப்பூர்' என்ற மரம் வளர்க்கும் திட்டம், 2015 முதல் நடைமுறையில் உள்ளது. இதுவரை, 11.70 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.விவசாயிகள், நீண்ட நாட்கள் வருவாய் அளிக்கும், வேம்பு மரங்களை நட்டு வளர்க்க ஆர்வம் செலுத்தி வருகின்றனர். இந்திய வனமரபியல் ஆராய்ச்சி நிலையம் சார்பில், மேம்படுத்தப்பட்ட 'வனத்துக்குள் திருப்பூர் (வி.டி.,) வேம்பு' என்ற புதிய ரகம் உருவாக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.'வெற்றி' அமைப்பின் தலைவர் சிவராம் கூறுகையில், ''வேப்பமரங்கள் வளர்ந்து காய் காய்க்க பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டியுள்ளது. புதிய ரகத்தில், ஆறு மாதங்களில் இருந்தே காய் பிடிக்கும். இதனால், வேப்பங்கொட்டை மூலம் உபரி வருவாய் பெறலாம்,'' என்றார்.இந்திய வனமரபியல் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானி புவனேஸ்வரனிடம் கேட்டபோது, ''25 வகையான வேப்பமரங்களில் இருந்து விதைகளை சேகரித்து, ஆய்வு துவங்கியுள்ளது. ''ஒட்டு ரகத்தில் 'வி.டி., -வேம்பு' விதை கிடைக்கும். தற்போதுள்ள மரங்களை காட்டிலும், வறட்சியை தாங்கி வளர்ந்து, மூன்று மடங்கு அதிகம் காய்க்கும் அளவுக்கு விதை உருவாக்கப்படும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X