அரசியல் செய்தி

தமிழ்நாடு

மாவட்ட கவுன்சிலர் தேர்தல்: தி.மு.க., வேட்பாளர் வெற்றி

Added : அக் 13, 2021
Share
Advertisement
அன்னுார்:கோவை மாவட்ட கவுன்சிலர் தேர்தலில், தி.மு.க., வேட்பாளர் வெற்றி பெற்றார்.கோவை மாவட்ட ஊராட்சி வார்டு எண் 3ல் மாவட்ட கவுன்சிலருக்கான இடைத்தேர்தல், கடந்த, 9ம் தேதி அன்னுார் ஒன்றியத்தில், 100 ஓட்டுச்சாவடிகளில் நடந்தது.நேற்று ஓட்டுகள் அன்னுார் தனியார் பள்ளியில் எண்ணப்பட்டன. இந்த வார்டில், 59 ஆயிரத்து 240 வாக்காளர்கள் உள்ளனர். இதில், 42 ஆயிரத்து 78 வாக்காளர்கள் ஓட்டு

அன்னுார்:கோவை மாவட்ட கவுன்சிலர் தேர்தலில், தி.மு.க., வேட்பாளர் வெற்றி பெற்றார்.கோவை மாவட்ட ஊராட்சி வார்டு எண் 3ல் மாவட்ட கவுன்சிலருக்கான இடைத்தேர்தல், கடந்த, 9ம் தேதி அன்னுார் ஒன்றியத்தில், 100 ஓட்டுச்சாவடிகளில் நடந்தது.நேற்று ஓட்டுகள் அன்னுார் தனியார் பள்ளியில் எண்ணப்பட்டன. இந்த வார்டில், 59 ஆயிரத்து 240 வாக்காளர்கள் உள்ளனர். இதில், 42 ஆயிரத்து 78 வாக்காளர்கள் ஓட்டு அளித்தனர்.தி.மு.க., வேட்பாளர் ஆனந்தன், 26 ஆயிரத்து 287 ஓட்டுகள் பெற்றார். அ.தி.மு.க., வேட்பாளர் கருப்பசாமி, 13,251 ஓட்டுகள் பெற்றார். ஆனந்தன் 13 ஆயிரத்து 36 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அ.ம.மு.க., - ம.நீ.ம., -- தே.மு.தி.க., நாம் தமிழர் கட்சிகளின் வேட்பாளர்களும், ஐந்து சுயேச்சைகளும், 'டிபாசிட்' இழந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X