அரசியல் செய்தி

தமிழ்நாடு

நீலகிரி இடைத்தேர்தல்: வெற்றி பெற்றது தி.மு.க.,

Added : அக் 13, 2021
Share
Advertisement
கூடலுார்:நீலகிரியில் நடந்த ஊராட்சி இடைத்தேர்தலில், தி.மு.க., முன்னிலை வகித்தது.நீலகிரி மாவட்டம், கூடலுார் ஊராட்சி ஒன்றியத்தில், தி.மு.க.,வை சேர்ந்த, 4வது வார்டு (மசினகுடி) கவுன்சிலர் ரவிகுமார்; 11வது வார்டு (சேரங்கோடு) கவுன்சிலர் ஆனந்தராஜ் ஆகியோர் இறந்தனர். இதற்கான இடைத்தேர்தல், அக்., 9ல் நடந்தது.* 4வது வார்டில், தி.மு.க., வேட்பாளர் உத்தமன், 1,249 பெற்று வெற்றி பெற்றார். சாமிநாதன்

கூடலுார்:நீலகிரியில் நடந்த ஊராட்சி இடைத்தேர்தலில், தி.மு.க., முன்னிலை வகித்தது.நீலகிரி மாவட்டம், கூடலுார் ஊராட்சி ஒன்றியத்தில், தி.மு.க.,வை சேர்ந்த, 4வது வார்டு (மசினகுடி) கவுன்சிலர் ரவிகுமார்; 11வது வார்டு (சேரங்கோடு) கவுன்சிலர் ஆனந்தராஜ் ஆகியோர் இறந்தனர். இதற்கான இடைத்தேர்தல், அக்., 9ல் நடந்தது.* 4வது வார்டில், தி.மு.க., வேட்பாளர் உத்தமன், 1,249 பெற்று வெற்றி பெற்றார். சாமிநாதன் (அ.தி.மு.க.,) 764; கவியரசன் (நாம் தமிழர்) 136; ராஜேந்திரன் (அ.ம.மு.க.,) 31; அரபாத் (சுயே.,) 38; நசீர் (சுயே.,) 184; செல்லாதவை,37 என ஓட்டுகள் பதிவானது.* 11வது வார்டில், தி.மு.க., வேட்பாளர் பாரதி, 1,706 ஓட்டுக்கள் பெற்று வெற்றி பெற்றார். லினிஸ் (அ.தி.மு.க.,) 591; தமிழ்செல்வன் (நாம் தமிழர்) 143; பூவேந்திரன் (அ.ம.மு.க.,) 10; அசோக்குமார் (சுயே.,) 235; பாலசுப்ரமணியம் 36; செல்லாதவை 51.* கோத்தகிரி நடுஹட்டி ஊராட்சி, 6வது வார்டுக்கான இடைத்தேர்தலில் மூன்று பேர் போட்டியிட்டனர். அதில், 112 ஓட்டுகள் பெற்று நதியா வெற்றி பெற்றார். திலகவதி, 110 ஓட்டு; ரேவதி,62 ஓட்டுகளும் பெற்றனர். மூன்று ஓட்டுகள் செல்லாத ஓட்டுகளாக அறிவிக்கப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X