அரசியல் செய்தி

தமிழ்நாடு

பா.ஜ., ஒரே ஒரு ஓட்டு: தே.மு.தி.க., 2 ஓட்டு

Added : அக் 13, 2021
Share
Advertisement
பெ.நா.பாளையம்:ஊராட்சி வார்டு தேர்தலில், பா.ஜ., ஆதரவு பெற்ற வேட்பாளர், ஒரே ஒரு ஓட்டு மட்டுமே பெற்றார். தே.மு.தே.க., ஆதரவு வேட்பாளர் இரண்டு ஓட்டுக்கள் பெற்றார்.கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம், குருடம்பாளையம் ஊராட்சி ஒன்பதாவது வார்டு உறுப்பினராக இருந்த ஜெயலட்சுமி உடல் நலக்குறைவால் காலமானார்.நேற்று பெரியநாயக்கன்பாளையம் ஒன்றிய அலுவலகத்தில் ஓட்டு எண்ணிக்கை

பெ.நா.பாளையம்:ஊராட்சி வார்டு தேர்தலில், பா.ஜ., ஆதரவு பெற்ற வேட்பாளர், ஒரே ஒரு ஓட்டு மட்டுமே பெற்றார். தே.மு.தே.க., ஆதரவு வேட்பாளர் இரண்டு ஓட்டுக்கள் பெற்றார்.கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம், குருடம்பாளையம் ஊராட்சி ஒன்பதாவது வார்டு உறுப்பினராக இருந்த ஜெயலட்சுமி உடல் நலக்குறைவால் காலமானார்.நேற்று பெரியநாயக்கன்பாளையம் ஒன்றிய அலுவலகத்தில் ஓட்டு எண்ணிக்கை நடந்தது. பா.ஜ., ஆதரவு வேட்பாளராக போட்டியிட்ட கார்த்திக் ஒரு ஓட்டு மட்டுமே பெற்று தோல்வி அடைந்தார். இவர் கோவை வடக்கு மாவட்ட பா.ஜ., இளைஞரணி துணை தலைவராகவும் பதவி வகிக்கிறார்.வேட்பாளர் கார்த்திக் கூறுகையில்,''நான் நான்காம் வார்டில் வசிக்கிறேன். தேர்தல் ஒன்பதாவது வார்டில் நடந்தது. எனக்கு ஒன்பதாவது வார்டில் ஓட்டு இல்லை. கட்சியினர் கூறியதால் போட்டியிட்டேன். அ.தி.மு.க., தி.மு.க., ஆதரவு பெற்ற வேட்பாளர்கள் பணத்தை வாரி இறைத்தனர். இதில் நாம் போட்டியிட்டு வெற்றி பெறுவது கடினம் என கருதியதால், பிரசாரத்துக்கு செல்லவில்லை,'' என்றார்.தே.மு.தே.க., ஆதரவு வேட்பாளராக போட்டியிட்டு, இரண்டு ஓட்டுக்கள் மட்டுமே பெற்ற இக்கட்சியின் மாவட்ட நிர்வாகி ரவிக்குமார் கூறுகையில்,''நான் ஆறாவது வார்டில் வசிக்கிறேன். ஒன்பதாவது வார்டில் ஓட்டு இல்லை. இது ஜனநாயக தேர்தல் அல்ல, பண நாயக தேர்தல்,'' என்றார்.இந்த வார்டில், தி.மு.க., ஆதரவு பெற்ற வேட்பாளர் அருள்ராஜ், 387 ஓட்டுக்கள் பெற்று வெற்றி பெற்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X