பொது செய்தி

தமிழ்நாடு

வால்பாறையில் கனமழை: அதிரப்பள்ளி செல்ல தடை

Added : அக் 13, 2021
Share
Advertisement
வால்பாறை:வால்பாறையில், விடிய, விடிய பெய்த கனமழையால், ரோட்டில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.கோவை மாவட்டம், வால்பாறை மற்றும் மேல்நீராறு, கீழ்நீராறு, அக்காமலை, கெஜமுடி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு கனமழை பெய்தது. வால்பாறையில் இருந்து அக்காமலை செல்லும் ரோட்டில் நள்ளிரவில் மரம் விழுந்து, ஐந்து மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.சோலையாறு

வால்பாறை:வால்பாறையில், விடிய, விடிய பெய்த கனமழையால், ரோட்டில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.கோவை மாவட்டம், வால்பாறை மற்றும் மேல்நீராறு, கீழ்நீராறு, அக்காமலை, கெஜமுடி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு கனமழை பெய்தது. வால்பாறையில் இருந்து அக்காமலை செல்லும் ரோட்டில் நள்ளிரவில் மரம் விழுந்து, ஐந்து மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.சோலையாறு அணையில், நேற்று காலை, 160.66 அடி நீர்மட்டம் இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 1,140 கனஅடி தண்ணீர் வரத்து இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு, 455 கனஅடி வீதம் பரம்பிக்குளம் அணைக்கு திறந்து விடப்பட்டது.வால்பாறையில் இருந்து கேரள மாநிலம் சாலக்குடி செல்லும் வழியில் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. இந்த நீர்வீழ்ச்சிக்கு, அதிக அளவில் சுற்றுலாப்பயணிகள் வருகின்றனர்.கனமழை பெய்வதால், அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. வால்பாறை - சாலக்குடி ரோட்டில் மரம் விழுந்து போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டது.அதனால், நீர்வீழ்ச்சிக்கு, சுற்றுலா பயணிகள் செல்ல கேரள வனத்துறையினர் நேற்று முதல் தடை விதித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X