பொது செய்தி

தமிழ்நாடு

100 சதவீத பள்ளிகள் ஆய்வு: 27க்குள் முடிக்க உத்தரவு

Added : அக் 13, 2021
Share
Advertisement
திருப்பூர்:அனைத்து துவக்க நிலை வகுப்புகளும் வரும் 27ம் தேதிக்குள் ஆய்வு செய்யப்பட்டு தயார் நிலையில் இருக்க வேண்டுமென தொடக்க கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நவ., 1 முதல் பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், அதற்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளது. பள்ளிகள் தோறும் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை, தொடக்க கல்வி

திருப்பூர்:அனைத்து துவக்க நிலை வகுப்புகளும் வரும் 27ம் தேதிக்குள் ஆய்வு செய்யப்பட்டு தயார் நிலையில் இருக்க வேண்டுமென தொடக்க கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நவ., 1 முதல் பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், அதற்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளது. பள்ளிகள் தோறும் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை, தொடக்க கல்வி இயக்குனர் அறிவொளி வெளியிட்டார். அதில் கூறியிருப்பதாவது:நீண்ட இடைவெளிக்கு பின் மாணவர்கள் நேரடி வகுப்பில் பங்கேற்பதால், அவர்களை உளவியல் ரீதியாக தயார்படுத்தி எளிதில் அணுகுவதற்கு தேவையான நடவடிக்கையை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும். பள்ளி வளாகங்கள், வகுப்பறைகள், கழிவறைகள் துாய்மையான முறையில் பராமரிக்கப்பட்டிருப்பதை உறுதி செய்வது அவசியம்.வட்டார கல்வி அலுவலர்கள், வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள் தங்கள் எல்லைக்குட்பட்ட அனைத்து பள்ளிகளையும், பார்வையிட்டு, பள்ளி தலைமை ஆசிரியருக்கு அறிவுரை வழங்க வேண்டும். வரும், 27ம் தேதிக்குள், 100 சதவீத பள்ளிகளும் ஆய்வு செய்யப்பட்டிருக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X