அரசியல் செய்தி

தமிழ்நாடு

உள்ளாட்சி தேர்தல் வெற்றி ஆட்சிக்கு கிடைத்த நற்சான்று: முதல்வர் ஸ்டாலின்

Updated : அக் 13, 2021 | Added : அக் 13, 2021 | கருத்துகள் (55)
Share
Advertisement
சென்னை: ஊரக உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க பெரும்பாலான இடங்களில் வெற்றிப்பெற்றதை அடுத்து, உள்ளாட்சி தேர்தல் வெற்றி ஆட்சிக்கு கிடைத்த நற்சான்று என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.நடந்து முடிந்த 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க., மிகுதியான இடங்களில் வெற்றிப்பெற்றது. உள்ளாட்சி தேர்தல் வெற்றி குறித்து முதல்வரும், தி.மு.க., தலைவருமான ஸ்டாலின் வெளியிட்ட
LocalBodyElection, Tamilnadu, DMK, Victory, CM, Stalin, MKStalin, தமிழகம், உள்ளாட்சி தேர்தல், திமுக, வெற்றி, முதல்வர், ஸ்டாலின், நன்றி, நற்சான்று

சென்னை: ஊரக உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க பெரும்பாலான இடங்களில் வெற்றிப்பெற்றதை அடுத்து, உள்ளாட்சி தேர்தல் வெற்றி ஆட்சிக்கு கிடைத்த நற்சான்று என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க., மிகுதியான இடங்களில் வெற்றிப்பெற்றது. உள்ளாட்சி தேர்தல் வெற்றி குறித்து முதல்வரும், தி.மு.க., தலைவருமான ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுகிறது தி.மு.க., அரசு என்ற நம்பிக்கையுடன் வாக்களித்த மக்களுக்கு நன்றி. தி.மு.க., அரசு செய்த சாதனைகளுக்கு மக்களின் அங்கீகாரமாகவும் வெற்றி அமைந்துள்ளது. திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் மகத்தான வெற்றி என செய்தி வருவது ஆட்சிக்கு கிடைத்த நற்சான்று.


latest tamil news


மருத்துவ நெருக்கடி, பொருளாதார நெருக்கடி என இக்கட்டான காலத்தில் தி.மு.க அரசு அமைந்தது. நிற்க நேரமில்லை என்கிற அளவுக்கு நானும், அமைச்சர்களும், மக்கள் பிரதிநிதிகளும் உழைத்தோம். சட்டசபை தேர்தலுக்கு முன்பு இருந்ததை விட 5 மாத காலத்தில் தி.மு.க.,வுக்கு செல்வாக்கு அதிகமாகி இருக்கிறது. 5 ஆண்டில் செய்ய வேண்டிய சாதனைகளை 5 மாதத்தில் செய்ததால் கிடைத்த வெற்றி இது. மக்கள் தொண்டே நமது செயல்பாடு என கொண்டாடும் வகையில் நமது பணிகள் அமையட்டும். நல்ல திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க உள்ளாட்சி பிரதிநிதிகள் உழைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (55)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Paraman - Madras,யூ.எஸ்.ஏ
13-அக்-202119:17:26 IST Report Abuse
Paraman அதீமூக்காவின் முதுகெலும்பு எம்ஜிஆர், 1987.இல் மரணமடைந்து கட்சி இரண்டாகி, 1989.இல் பலவருட வனவாசத்திற்கு பிறகு கூட்டணி கட்சி உதவியில், கள்ள ஓட்டுக்கள் மூலம் ஆட்சியை பிடித்த கட்டுமர கருணாவும் நினைத்திருப்பார் இதுபோல தான் ஆனால் நடந்தது என்ன?? இரண்டே வருடங்களில் ஜெயலலிதா என்ற பெண்மணி கருணாவையும், தீயமூக்காவையும் அழித்து ஒன்றுமில்லாமல் செய்யும் அளவிற்கு அரசியல் வானில் விஸ்வரூபம் எடுத்து அதிமூக்காவை பலப்படுத்திய விதி அல்லது வரலாறு இந்த ஊழல் கூட்டத்திற்கு மறந்துவிட்டது போல அதற்காக அதிமுகா பெரிய யோக்கிய கட்சி அதனால் அது வரவேண்டும் என்று சொல்லவில்லை என்னதான் எச்சில் பிரியாணி, சாராய அடிமைகள் இந்த நாட்டை ஊழல் குடும்பத்திற்கு விற்பதற்கு முனைந்தாலும், விதி என்ற காலச்சக்கரம் அதை தடுத்தும், மறுத்தும் வந்துள்ளது என்ற மாபெரும் உண்மையை அனைவரும் உணர வேண்டும். அது போல அந்த விதி என்ற காலச்சக்கரம் மீண்டும் ஒரு எதிர்பாராத திருப்பத்தை, தலைமையை இந்த தமிழகத்தின் உண்மையான நேர்மையான மக்களுக்காக அருளும் என்பதில் துளியும் சந்தேகம் வேண்டாம். தீயவர்களுக்கு தங்கள் ஓட்டுக்களை விற்கும் கொத்தடிமைகள், எச்சில் பிரியாணி சாராய ₹200.ஊவா அல்லக்கைகள், சமூக அநீதி புறவாசல் டுமீளர் கூட்டங்கள் இதை உணரவில்லை என்றால் அந்த 'விதி என்னும் தர்ம காலச்சக்கிரம்' அவர்களுக்கும் சேர்த்தே ஆப்பு வைக்கும் அந்த தகுதியற்றா கூட்டம் அமெரிக்காவில் இருந்தாலும். அதுவரை இது போல் கொக்கரித்து கொண்டும் ஊளை இட்டு கொண்டும் இருக்கலாம்.
Rate this:
Cancel
Desi - Chennai,இந்தியா
13-அக்-202117:37:40 IST Report Abuse
Desi ஆக இன்னும் ரெண்டே மாசம் தான்.
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
13-அக்-202116:28:14 IST Report Abuse
Vena Suna உங்க ஜாதகம் நல்லா இருக்கு. கிரகங்கள் விரைவில் இடம் பெயரும்.பாதகம் ஆகும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X