சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரூ.35 லட்சம் லஞ்ச பணம் பறிமுதல்: வன அதிகாரி, வனவர் மீது வழக்கு

Added : அக் 13, 2021
Share
Advertisement
விழுப்புரம்: கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை வனத்துறை அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதாக, விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. நேற்று முன்தினம் ஏ.டி.எஸ்.பி., தேவநாதன் தலைமையிலான போலீசார், உளுந்துார்பேட்டை பகுதியில் கண்காணித்தனர்.இரவு 8:00 மணிக்கு உளுந்துார்பேட்டை ரவுண்டானா அருகே, காரில் வந்த நபரிடம் ஒருவர் பணம் கொடுத்தார். அப்போது,
ரூ.35 லட்சம் லஞ்ச பணம் பறிமுதல்: வன அதிகாரி, வனவர் மீது வழக்கு

விழுப்புரம்: கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை வனத்துறை அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதாக, விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. நேற்று முன்தினம் ஏ.டி.எஸ்.பி., தேவநாதன் தலைமையிலான போலீசார், உளுந்துார்பேட்டை பகுதியில் கண்காணித்தனர்.இரவு 8:00 மணிக்கு உளுந்துார்பேட்டை ரவுண்டானா அருகே, காரில் வந்த நபரிடம் ஒருவர் பணம் கொடுத்தார்.

அப்போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் இருவரையும் பிடித்தனர். காரை சோதனை செய்ததில் கட்டுக் கட்டாக பணம் இருந்தது.பணம் கொடுத்த நபர், உளுந்துார்பேட்டை வனவர் சங்கர் கணேஷ் என்பதும், வாங்கியவர் புதுக்கோட்டை வனத்தோட்டக் கழக மண்டல மேலாளர் நேசமணி என்பதும் தெரிந்தது. இருவரையும், உளுந்துார்பேட்டை வனத்தோட்டக் கழக அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன், திருக்கோவிலுார் மண்டலத்திற்கு உட்பட்ட திருக்கோவிலுார், சங்கராபுரம், தியாக துருகம், பகண்டை, திருவண்ணாமலை மாவட்டம் மேல்செங்கம் ஆகிய வனச்சரக பகுதிகளுக்கும் சேர்த்து, பொறுப்பு அதிகாரியாக நேசமணி செயல்பட்டு வந்துள்ளார்.இவர், வனத்தோட்ட காப்புக்காடு பகுதிகளில் மரக்கன்று, செடிகள் வளர்த்து பராமரிக்கவும், உற்பத்தி செய்ய வரும் ஒப்பந்ததாரர்களிடம் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை கமிஷனாக பெற்றுள்ளார்.கமிஷன் தொகையை அந்தந்த வனவர்கள் வசூலித்து தருமாறு உத்தரவிட்டுள்ளார். அதன்படி, ஒப்பந்ததாரர்களிடம் வசூலித்த 11 லட்சத்து 64 ஆயிரத்து 500 ரூபாயை வனவர் சங்கர்கணேஷ், நேசமணியிடம் கொடுத்த போது சிக்கியது தெரிந்தது.

மேலும், புதுக்கோட்டை, காரைக்குடி, அறந்தாங்கியில் உள்ள ஒப்பந்ததாரர்களிடம் வசூலித்து காரில் எடுத்து வந்த 24 லட்சம் ரூபாயையும் போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து நேசமணி, இது போல் யார், யாரிடம் கமிஷன் பெற்றுள்ளார் என்பது குறித்து, உளுந்துார்பேட்டை வனச்சரக அலுவலர்கள், ஊழியர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணை நேற்று அதிகாலை 5:00 மணி வரை நீடித்தது.தொடர்ந்து, கணக்கில் வராத 35 லட்சத்து 64 ஆயிரத்து 500 ரூபாய், கார் மற்றும் முக்கிய ஆவணங்களை போலீசார் கைப்பற்றி, விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.மேலும், லஞ்சம் வாங்கியதாக, மண்டல மேலாளர் நேசமணி, 38; வனவர் சங்கர்கணேஷ், 32, ஆகியோர் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் உள்ள நேசமணி வீட்டில், நேற்று லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., இமயவர்மன் தலைமையிலான போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். ஆறு மணி நேரம் நடந்த சோதனையில், பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X