பொது செய்தி

தமிழ்நாடு

வெள்ளத்தில் மிதக்கப்போகுது வேளச்சேரி: அரசியல் தலையீட்டால் அதிகாரிகள் அலட்சியம்

Updated : அக் 13, 2021 | Added : அக் 13, 2021 | கருத்துகள் (16)
Share
Advertisement
வடிகால் பணிகளுக்கு விடிவு எப்போது?வேளச்சேரி, தமிழகத்தில், விரைவில் பருவ மழை துவங்க உள்ள நிலையில், சென்னை வேளச்சேரியில் வடிகால் பணிகளை துரிதப்படுத்துவதில் அதிகாரிகள் தொடர்ந்து அலட்சியம் காட்டி வருகின்றனர்.இது தொடர்பாக, 2015ம் ஆண்டு உயர்அதிகாரிகள் போட்ட உத்தரவை, வார்டு பொறியாளர்கள் மதிக்காததுடன், 2019ல், மதிப்பீடு தயாரித்தும், அரசியல்வாதிகள் மிரட்டலுக்கு
வெள்ளம்,வேளச்சேரி, அரசியல் தலையீடு, அதிகாரிகள், அலட்சியம், வடிகால்  பணி,  விடிவு, எப்போது?


வடிகால் பணிகளுக்கு விடிவு எப்போது?வேளச்சேரி, தமிழகத்தில், விரைவில் பருவ மழை துவங்க உள்ள நிலையில், சென்னை வேளச்சேரியில் வடிகால் பணிகளை துரிதப்படுத்துவதில் அதிகாரிகள் தொடர்ந்து அலட்சியம் காட்டி வருகின்றனர்.

இது தொடர்பாக, 2015ம் ஆண்டு உயர்அதிகாரிகள் போட்ட உத்தரவை, வார்டு பொறியாளர்கள் மதிக்காததுடன், 2019ல், மதிப்பீடு தயாரித்தும், அரசியல்வாதிகள் மிரட்டலுக்கு பயந்து, வடிகால் பணிகளை மேற்கொள்ளாமல் உள்ளனர்.


அச்சம்இதனால், 2015ம் ஆண்டு போல், மீண்டும் வெள்ள பாதிப்பை எதிர்கொள்ள நேரிடுமோ என அப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும், அக்., - நவ., மாதங்களில் பருவமழை பெய்வது வழக்கம். மழைக்காலங்களில், வடிகால்களில் அடைப்பு ஏற்பட்டு, குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் புகாமல் இருக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். சென்னையில், தாழ்வான பகுதிகள், வெள்ளம் பாதிக்கும் இடங்கள் கண்டறியப்பட்டு, மாநகராட்சி சார்பில் அப்பகுதிகளில் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படும். எவ்வளவு நடவடிக்கைகள் மேற்கொண்டாலும், மழை நீர் வடிகால்களில் சட்டவிரோத கழிவுநீர் கலப்பு காரணமாக, மடுவாங்கரை, வேளச்சேரி பகுதிகள் கடுமையாக பாதிக்கப்படும்.

அரசு திட்டங்களுக்காக கையகப்படுத்தியது மற்றும் தனியார் ஆக்கிரமிப்புகள் போக, வேளச்சேரி ஏரி, 55 ஏக்கர் பரப்பளவில் உள்ளது.தொடரும் ஆக்கிரமிப்புகளால், இந்த ஏரியின் பரப்பளவு நாளுக்கு நாள் சுருங்கி வருவதே, இப்பகுதிகளில் வெள்ள பாதிப்பு ஏற்பட முக்கிய காரணமாக கருதப்படுகிறது. ஆலந்துார், கிண்டி, ஆதம்பாக்கம் பகுதியில் இருந்து, ஏரிக்கு வரும் மழைநீர், அங்கிருந்து உபரிநீர் கால்வாய் வழியாக சதுப்பு நிலத்தை அடைகிறது.பரங்கிமலை, கத்திப்பாரா பகுதியில் இருந்து, அடையாறு ஆறு, அரை கி.மீ., துாரம் கொண்டது.

ஆனால், இங்குள்ள மழைநீர், நீரோட்ட பாதையில், ஆலந்துார், பரங்கிமலை - -கிண்டி இடையிலான ரயில்வே தண்டவாளம், மடுவாங்கரை, நேதாஜி நகர் சாலை வழியாக ஏரியில் சேர்ந்து, அங்கிருந்து சதுப்பு நிலத்தை அடைகிறது.அரை கி.மீ., துாரத்தில், அடையாறு ஆற்றை அடைய வேண்டிய நீர், 5 கி.மீ., துாரம் பயணித்து, சதுப்பு நிலத்தை அடைகிறது.


ஆக்கிரமிப்புமடுவாங்கரையில் இருந்து வேளச்சேரி ஏரி முறையாக நீரோட்ட பாதை இல்லாததால், நேதாஜிநகர் சாலையில், ஒவ்வொரு கனமழைக்கும், 3 அடி உயரத்தில் மழைநீர் தேங்குவது வாடிக்கையாக உள்ளது. இந்த சாலையை சுற்றி உள்ள, 15க்கும் மேற்பட்ட தெருக்கள் மற்றும் அங்குள்ள வீடுகளில், வெள்ளம் புகுந்து பாதிப்பு ஏற்படுத்துகிறது. நேதாஜி சாலையில், 15 ஆண்டுக்கு முன் கட்டிய, 2 அடி அகல வடிகால், மொத்த நீரையும் கடத்தும் கொள்ளளவில் இல்லை.கடந்த, 2015, 2016ம் ஆண்டுகளில் பெரிய அளவில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டபோது, நேதாஜி நகர் பகுதியை உயர் அதிகாரிகள் பார்வையிட்டனர்.

அப்போது, 'நேதாஜிநகர் சாலையில் உள்ள, 2 அடி அகல வடிகால் போதுமானதாக இல்லை; சாலையின் இரு பகுதியிலும், 4 அடி அகலம் வீதம் வடிகால் கட்ட வேண்டும் அல்லது சாலை மைய பகுதியில், 10 அடி அகல மூடி கால்வாய் அமைக்க வேண்டும்' என பரிந்துரைத்தனர். மடுவாங்கரையில் இருந்து ஏரி வரை உள்ள நேதாஜி நகர் சாலை, 174 மற்றும் 177வது வார்டில் வருவதால், மதிப்பீடு தயாரிப்பது யார் என, இரு வார்டு பொறியாளர்கள் இடையே பிரச்னை எழுந்தது. இதனால், வடிகால் கட்டுவது கிடப்பில் போடப்பட்டது.

இந்நிலையில், 2019ம் ஆண்டு மீண்டும் ஆய்வு செய்த அதிகாரிகள், பொறியாளர்கள் ஒருங்கிணைந்து மதிப்பீடு தயாரிக்க உத்தரவிட்டனர். அதன்படி, மதிப்பீடும் தயாரித்து, மழைநீர் வடிகால் துறைக்கு அனுப்பப்பட்டது. ஆனால், மதிப்பீடு தயாரித்து இரண்டு ஆண்டுகள் ஆகியும், வடிகால் கட்டப்படவில்லை. இதனால், கடந்த ஆண்டு பருவ மழையின் போதும், வேளச்சேரி பகுதி முழுதும் பெரும் பாதிப்பை சந்தித்தது. தற்போது, புதிய வடிகால் அமைக்கப்படாதது, ஏற்கனவே உள்ள வடிகால்களை முறையாக துார்வாராதது, பராமரிக்காதது உள்ளிட்ட பல காரணங்களால், இந்த ஆண்டும் வெள்ள நீரில் வேளச்சேரி மிதப்பது உறுதி என, அப்பகுதி மக்கள் அச்சம் கலந்த வேதனை தெரிவித்துள்ளனர்.

உள்ளூர் அரசியல்வாதிகளின் செல்வாக்கு காரணமாக, வேளச்சேரியில் நடைபாதை, வடிகால் செல்லும் வழி, பொது போக்குவரத்துக்கான பாதை என, பல இடங்களில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளன.


மிரட்டல்latest tamil news


அரசியல்வாதிகளின் மிரட்டலுக்கு பயந்து, ஆக்கிரமிப்புகளை அகற்ற, மாநகராட்சி அதிகாரிகள் தயக்கம் காட்டுவதாக, அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். கடந்த, 2019ம் ஆண்டு திட்ட அறிக்கை தயாரித்தும், நேதாஜி நகர் பகுதியில் வடிகால் பணி நடைபெறாததற்கும், உள்ளூர் அரசியல்வாதிகளின் மிரட்டலே காரணம் எனவும் புகார் எழுந்துள்ளது. அரசியல்வாதிகளுக்கு அடிபணிந்து, மக்களின் அடிப்படை பிரச்னைகளுக்கு தீர்வு காணாமல் அலட்சியம் காட்டும் அதிகாரிகளால், வரும் பருவமழைக்கு, வேளச்சேரி தப்புமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மழைநீர் எளிதாக பூமிக்கடியில் செல்லும், மணல் பரப்பான, கிழக்கு கடற்கரை சாலையில் வடிகால் கட்ட, பல கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது. பல ஆண்டுகளாக வெள்ள பாதிப்பால் தவிக்கும் வேளச்சேரி பகுதியில், முறையாக வடிகால் கட்டமைப்பை ஏற்படுத்த, இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பொறியாளர், எட்டு ஆண்டுகள் ஒரே வார்டில் பணி புரிந்தும், வெள்ள தடுப்பு நடவடிக்கைக்கு எவ்வித ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் எடுத்ததில்லை. 2015ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தில், நிறைய இழந்துவிட்டோம்; அதிலிருந்து மீள்வதற்கே, ஆறு ஆண்டுகள் ஆகிவிட்டது. மீண்டும் அது போன்ற நிலையை நினைத்துக்கூட பார்க்க முடியாது. எனவே, தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள்,
வேளச்சேரி.

வேளச்சேரி ஏரி வரை செல்லும் நேதாஜி சாலை, 1 கி.மீ., துாரம் கொண்டது. இதில் உள்ள, 2 அடி அகல வடிகாலில், அடைப்பும், சட்ட விரோத கழிவுநீர் இணைப்பும் அதிகம் உள்ளது. இருக்கிற வடிகாலை, முறையாக பராமரிக்க, இணைப்புகளை துண்டிக்க சென்றால், சில அரசியல் கட்சி நிர்வாகிகள் இடையூறு செய்கின்றனர். அதையும் மீறி நடவடிக்கை எடுத்தால், மிரட்டல் விடுக்கின்றனர். இங்கு வார்டு பொறியாளராக பணி செய்ய, யாரும் முன்வருவதில்லை. இது குறித்து புதிதாக பொறுப்பேற்ற உயர் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம்.
மாநகராட்சி அதிகாரிகள்.

Advertisement
வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
14-அக்-202103:33:49 IST Report Abuse
meenakshisundaram ஐயா .இப்போத்தான் முக வோடே சிலையை வேளச்சேரில தொறந்திருக்கோம் மிச்ச வேலையை அங்குள்ள சந்திரசேகர் (நடிகர் மற்றும் திமுக ) பாத்துக்கிடுவாரு
Rate this:
Cancel
Ian - Bridgewater,யூ.எஸ்.ஏ
14-அக்-202102:54:57 IST Report Abuse
Ian As long as stupid people Dravidian parties not even basic necessities will be full filled. Blame it on themselves for this pathetic situation. again and again the stupid politicians to get the same results. No wonder India stays as developed nation for the past 70 years. Hold the politicians responsible with mandates ( roads, electricity, health, education, transportation - government should be the provider) and don't give any chance not even any local election. Alas, who cares as long as the parties give Rs.500 to Rs.1000 vote for them. Nothing will happen for another 100 years.
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
13-அக்-202121:43:34 IST Report Abuse
Ramesh Sargam வொவொரு வருடமும் மழை காலத்தில் வேளச்சேரி வெள்ளத்தில் மூழ்கிப்போவதால் வேளச்சேரி என்கிற பெயரை மாற்றி 'வெள்ளச்சேரி' என்று கூறுவது சிறப்பு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X