பொது செய்தி

தமிழ்நாடு

90 வயதில் பஞ்., தலைவராக வெற்றி பெற்ற பாட்டி; எதிர்த்த வேட்பாளர்கள் டெபாசிட் இழப்பு

Updated : அக் 13, 2021 | Added : அக் 13, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
திருநெல்வேலி: திருநெல்வேலியில் 90 வயதில் பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற மூதாட்டி. மகிழ்ச்சியில் மூதாட்டியை தோளில் சுமந்து ஆதரவாளர்கள் ஊஞ்சலாடினர். தமிழகம் முழுவதும் ஒன்பது மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த 6 மற்றும் 9ம் தேதிகளில் நடைபெற்றது. இதற்கான ஓட்டு எண்ணிக்கை நேற்று (அக்.,12) காலை முதல் நடைபெற்று வருகிறது. பெரும்பாலான இடங்களில் தி.மு.க.,
LocalBodyElection, Tamilnadu, ElectionResult, தமிழகம், உள்ளாட்சி தேர்தல், மூதாட்டி, ஊராட்சி தலைவர், பஞ்சாயத்து தலைவர், வெற்றி

திருநெல்வேலி: திருநெல்வேலியில் 90 வயதில் பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற மூதாட்டி. மகிழ்ச்சியில் மூதாட்டியை தோளில் சுமந்து ஆதரவாளர்கள் ஊஞ்சலாடினர்.

தமிழகம் முழுவதும் ஒன்பது மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த 6 மற்றும் 9ம் தேதிகளில் நடைபெற்றது. இதற்கான ஓட்டு எண்ணிக்கை நேற்று (அக்.,12) காலை முதல் நடைபெற்று வருகிறது. பெரும்பாலான இடங்களில் தி.மு.க., வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். இந்த நிலையில் திருநெல்வேலி மாவட்டம் சிவந்திப்பட்டி பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு அதே பகுதியைச் சேர்ந்த 90 வயது மூதாட்டி பெருமாத்தாள் போட்டியிட்டார். நேற்று வெளியான தேர்தல் முடிவில் பெருமாத்தாள் 2ம் இடம் பிடித்த வேட்பாளரை விட ஆயிரம் ஓட்டுகள் கூடுதலாக பெற்று வெற்றிப்பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.


latest tamil news


மேலும், தன்னை எதிர்த்து போட்டியிட்ட 2 வேட்பாளர்களையும் மூதாட்டி டெபாசிட் இழக்க செய்தார். பெருமாத்தாளின் மகன் கே.எஸ்.தங்கபாண்டியன், இதுவரை தொடர்ந்து 4 முறை சிவந்திபட்டி பஞ்சாயத்து தலைவராக இருந்தார். இந்த முறை சிவந்திபட்டி ஊராட்சி தலைவர் பதவி பொது பெண்களுக்கு ஒதுக்கப்பட்டதால் தங்கபாண்டியன், கீழநத்தம் ஒன்றிய வார்டில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். தமக்கு பதிலாக தமது தாயாரை நிறுத்தி வெற்றி பெற்றிருக்கிறார் தங்கபாண்டியன்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Soumya - Trichy,இந்தியா
14-அக்-202100:44:09 IST Report Abuse
Soumya நம்மிள் விடியலும் உங்கள் வயசை நெருங்கிவிட்டார் அம்மா வயசை மறைப்பதற்கு தான் அந்த டொப்பி ஹீஹீஹீ
Rate this:
Cancel
Ram - Thanjavur,இந்தியா
13-அக்-202122:41:19 IST Report Abuse
Ram Patta patipu padichirunthalum patti sollai thattathe
Rate this:
Cancel
திருஞான சம்பந்த மூர்த்திதாச ஞானதேசிகன் எல்லாம் வாய் பதனம் கைபதனம்தான் அடிச்சு பல்லை பேத்துடுவேன்னு மெரட்டலை அனைவரிடமும் அன்பாய் இருப்பார்போல அதனாலேயே எதிர்த்த அனைவருமே டெபாசிட் காலி இருந்த இடத்திலிருந்தே சாதிக்க போரார் பாருங்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X