பொது செய்தி

தமிழ்நாடு

டிரான்ஸ்பார்மர் அமைக்க கட்டணம் பெறக்கூடாது: தீர்ப்பாயம் உத்தரவால் மின் வாரியத்துக்கு 'ஷாக்'

Updated : அக் 13, 2021 | Added : அக் 13, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்கும் செலவை மின்வாரியமே ஏற்க வேண்டுமென்ற விதிமுறையை மீறி, கோவையில் நுகர்வோரிடம் வசூலித்த, 1.5 கோடி ரூபாயை, மின்குறை தீர்ப்பாயம் உத்தரவால் திருப்பித்தர வேண்டிய கட்டாயம் மின் வாரியத்துக்கு ஏற்பட்டுஉள்ளது.தமிழ்நாடு மின் பகிர்மான விதியின்படி, புதிய மின் இணைப்புகளை வழங்குவதற்கான டிரான்ஸ்பார்மர்கள், மின் கம்பங்கள், ஏபி ஸ்விட்ச் மற்றும் அவை
டிரான்ஸ்பார்மர், கட்டணம், தீர்ப்பாயம், மின் வாரியம்,  ஷாக்

புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்கும் செலவை மின்வாரியமே ஏற்க வேண்டுமென்ற விதிமுறையை மீறி, கோவையில் நுகர்வோரிடம் வசூலித்த, 1.5 கோடி ரூபாயை, மின்குறை தீர்ப்பாயம் உத்தரவால் திருப்பித்தர வேண்டிய கட்டாயம் மின் வாரியத்துக்கு ஏற்பட்டுஉள்ளது.

தமிழ்நாடு மின் பகிர்மான விதியின்படி, புதிய மின் இணைப்புகளை வழங்குவதற்கான டிரான்ஸ்பார்மர்கள், மின் கம்பங்கள், ஏபி ஸ்விட்ச் மற்றும் அவை சார்ந்த உபகரணங்கள் மற்றும் உதிரி பாகங்களுக்கான செலவை மின் வாரியமே ஏற்க வேண்டும். ஆனால், தொகுப்பு வீடுகள், அடுக்கு மாடிக் குடியிருப்புகள், வணிக வளாகங்கள், தொழிற்சாலைகள், ஷாப்பிங் மால்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் டிரான்ஸ்பார்மர் பொருத்துவதற்கு, விண்ணப்பதாரரிடமே அதற்கான தொகை பெறப்படுகிறது.

இதுபற்றி தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்துக்கு நிறைய புகார்கள் சென்றன. கடந்த டிச., 24ல் சில திருத்தங்களை வெளியிட்டு, 'தமிழ்நாடு மின்சார வினியோக விதியின்படி, டிரான்ஸ்பார்மர்கள், மின் கம்பங்கள் மற்றும் அவை சார்ந்த உபகரணங்களை, மின்வாரியத்தின் செலவில்தான் அமைக்க வேண்டும்' என்று தெளிவுபடுத்தியது ஆணையம்.

ஆனால், அதற்குப் பின்னும் தமிழகம் முழுவதும் வளாகக் குடியிருப்புகள், தொகுப்பு வீடுகள், பெரிய கட்டடங்கள், வளாகங்கள், தொழிற்சாலைகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் டிரான்ஸ்பார்மர்களை புதிதாக அமைப்பதற்கு, அதற்குரிய கட்டணம் வசூலித்துக் கொண்டிருந்தது மின் பகிர்மானக்கழகம்.கோவை நீலம்பூரில் உள்ள ஒரு கல்வி நிறுவன வளாகத்தில் புதிய டிரான்ஸ்பார்மர்கள் அமைப்பதற்கு 1.5 கோடி ரூபாய் தொகை, மின்பகிர்மானக்கழகத்திற்குச் செலுத்தப்பட்டுள்ளது.

டிரான்ஸ்பார்மருக்காக ஒரு புரமோட்டர் செலுத்தும் தொகை, அந்த தொகுப்பு வீடுகள் அல்லது அடுக்குமாடிக் குடியிருப்புகளில் கட்டப்படும் வீட்டின் மதிப்பில் கூட்டப்பட்டு, வீடு வாங்குவோரின் தலையில் சுமத்தப்படுகிறது.இதனால் மின் குறை தீர்ப்பாயத்திடம் புரமோட்டர்கள், நிறுவனங்களின் நிர்வாகிகள் பலரும் இதுபற்றி மேல்முறையீடு செய்தனர்.

இந்த மனுக்களை விசாரித்த மின் குறை தீர்ப்பாயம், 'மின் பகிர்மான விதிகளை மீறியும், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கொண்டு வந்த திருத்தங்களை மீறியும், புதிய டிரான்ஸ்பார்மர்களை அமைக்க, மின் நுகர்வோரிடம் வசூலித்த அனைத்துத் தொகையையும் திருப்பித்தர வேண்டும்' என்று, செப்., 24ல் உத்தரவு பிறப்பித்தது.


latest tamil news



'கோவை மண்டலத்தில் மட்டும் ஒன்றரை கோடி ரூபாயை மின் பகிர்மானக்கழகம் திருப்பித்தர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

'அந்தத் தொகை எப்போது திருப்பித்தரப்படும் என்று கோவை மின் பகிர்மானக்கழக அதிகாரிகளிடம் கேட்டபோது, 'மின் வாரியத்தின் ஒப்புதலுக்கு எழுதப்பட்டுள்ளது. அங்கிருந்து பதில் கிடைத்தபின்பே, அந்தத் தொகை திருப்பித்தரப்படும்' என்றனர்.

-நமது சிறப்பு நிருபர்-

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ram - ottawa,கனடா
13-அக்-202120:39:58 IST Report Abuse
Ram மக்களை சுரண்டும் மின்வாரியத்தை தனியார் மயமாகவேண்டும் .... இடவொதுக்கீடு மற்றும் பனவொதுக்கீட்டால் நாசமாய் போய்விட்டது
Rate this:
Cancel
R KUMAR - Oregon,யூ.எஸ்.ஏ
13-அக்-202119:53:32 IST Report Abuse
R KUMAR அரசின் நிறுவனத்துக்கு செலுத்திய தொகை என்று திரும்பி வந்துள்ளது? பி.எஸ்.என்.எல் நிறுவனத்துக்கு செலுத்திய தொகை இரண்டு ஆண்டுகள் ஆகியும் திரும்பவில்லை. நம்மிடம் இருந்தால் முதலில் செலுத்தக் கூறுவார்கள். நோட்டீஸ் கொடுப்பார்கள், ஜப்தி செய்வார்கள். நமக்கு கொடுக்கவேண்டிய தொகையை கொடுக்க நிதி இல்லை என்பார்கள். வெட்கக்கேடு.
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
13-அக்-202117:55:12 IST Report Abuse
sankaseshan திராவிட அரசின் விடியல் இப்படித்தான் இருக்கும் ,மின்வெட்டால் இருள் சூழும் பொது விடியலுக்கு காத்திருக்க வேண்டும் தமிழன் தலை எழுத்து
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X