பொது செய்தி

தமிழ்நாடு

22 வயது பொறியியல் கல்லூரி மாணவி ஊராட்சி தலைவராக வெற்றி பெற்று சாதனை

Updated : அக் 13, 2021 | Added : அக் 13, 2021 | கருத்துகள் (17)
Share
Advertisement
தென்காசி: தென்காசி மாவட்டம் கடையம் ஊராட்சி ஒன்றியம் வெங்காடம்பட்டி ஊராட்சி தலைவர் பதவிக்கு 22 வயதுடைய பொறியியல் கல்லூரி மாணவி போட்டியிட்டு வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.தென்காசி மாவட்டமாக கடையம் ஊராட்சி ஒன்றியம் வெங்காடம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 5 பேர் போட்டியிட்டனர். இவர்களில் வெங்காடம்பட்டி ஊராட்சி லெட்சுமியூர் பகுதியைச் சேர்ந்த ர.ஸாருகலா (வயது 22)
தென்காசி, வெங்காடம்பட்டி ஊராட்சி, பொறியியல் மாணவி, தலைவர் பதவி, தேர்வு, குறைந்த வயது, சாதனை,

தென்காசி: தென்காசி மாவட்டம் கடையம் ஊராட்சி ஒன்றியம் வெங்காடம்பட்டி ஊராட்சி தலைவர் பதவிக்கு 22 வயதுடைய பொறியியல் கல்லூரி மாணவி போட்டியிட்டு வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.

தென்காசி மாவட்டமாக கடையம் ஊராட்சி ஒன்றியம் வெங்காடம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 5 பேர் போட்டியிட்டனர். இவர்களில் வெங்காடம்பட்டி ஊராட்சி லெட்சுமியூர் பகுதியைச் சேர்ந்த ர.ஸாருகலா (வயது 22) 3,336 ஓட்டுக்கள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ரேவதி முத்து வடிவு என்பவரை விட 796 ஓட்டுகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார். மேலும், இதே ஊராட்சியில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட மற்ற மூன்று பேர்களும் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர்.


தென்காசி மாவட்டம் கடையம் ஒன்றியம் வெங்காடம்பட்டி ஊராட்சி தலைவர் பதவிக்கு 5 பேர் போட்டியிட்டனர். 22 வயது இன்ஜினியர் சாருகலா 3,336 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். 2வது இடம்பிடித்த ரேவதி முத்து வடிவை விட சாருகலா 796 ஓட்டு அதிகம் பெற்றார். எஞ்சிய மூவர் டெபாசிட் இழந்தனர். சாருகலா கோவை நேஷனல் கல்லூரியில் முதுகலை பொறியியல் முதலாமாண்டு படித்து வருகிறார். தந்தை ரவி சுப்பிரமணியன் செங்கல் சூளை நடத்தி வருகிறார். தாய் சாந்தி பூலாங்குளம் அரசு பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்க்கிறார். இளவயதிலேயே ஊராட்சி தலைவர் பதவிக்கு தேர்வான சாருகலாவை அனைத்து தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். கிராமத்தின் வளர்ச்சிக்கு பாடுபடுவேன் என கூறினார்.

latest tamil newsவெங்காடம்பட்டி ஊராட்சி மன்ற தலைவராக வெற்றி பெற்றுள்ள ஸாருகலா கோவை நேஷனல் கல்லூரியில் இளங்கலை பொறியியல் படித்து இந்த ஆண்டு முதுகலை பொறியியல் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவரது தந்தை ரவி சுப்பிரமணியன் சொந்தமாக செங்கல் சூளை மற்றும் விவசாயம் செய்து வருகிறார்.

இவரது தாய் சாந்தி பூலாங்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் முதுநிலை பட்டதாரி ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு 19 வயதில் சந்துரு என்ற தம்பி உள்ளார். தமிழகத்தில் மிகவும் குறைந்த வயதில் ஊராட்சி மன்ற தலைவராக தேர்தலில் போட்டியிட்டு வெற்றியுள்ள ஸாருகலாவிற்கு வெங்காடம்பட்டி ஊராட்சி பகுதியைச் சார்ந்த அனைத்து தரப்பு மக்களும் பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்து உள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
spr - chennai,இந்தியா
15-அக்-202120:35:19 IST Report Abuse
spr பைத்தியக்காரத்தனமாக பல ஆயிரம் கொடுத்துப் பட்டப்படிப்பெல்லாம் படிப்பதனை விட, நீட் தேர்வில் வெற்றி பெற வேண்டுமா வேண்டாமா என்றெல்லாம் போராடாமல் இது போல அரசியலில் இறங்கினால் பல தலைமுறைக்கு நல்லது செய்தால் புகழும் அல்லது செய்யும் வகையில் சொத்தும் சேர்க்கலாம். கால நிலவரம் அறிந்தவர் பாராட்டுவோம். நாலு காசு தனக்குச் சேர்த்துக் கொண்டாலும் ஊருக்கு நல்லது செய்வாரென்று நம்புவோம்
Rate this:
Cancel
sankar - chennai,இந்தியா
15-அக்-202108:59:08 IST Report Abuse
sankar சிங்கப்பெண்ணே வாழ்த்துக்கள் ஊழலுக்கு எதிராக குரல் கொடுங்கள் மகளே
Rate this:
Cancel
Sankar Ramu - Carmel,யூ.எஸ்.ஏ
13-அக்-202120:55:46 IST Report Abuse
Sankar Ramu வாழ்த்துக்கள் இளம் பெண்ணே. மக்கள் சேவை செய்ய அடித்தட்டு மக்களுக்கும் உரிமை உண்டுன்னு நிறுபித்ததற்கு. சிலர் தன் குடும்பம் மட்டுமே ஆளனும்னு அடக்குது இளைஞர்களை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X