கறுப்பு கொடி ஏந்தி விவசாயிகள் பேரணி

Added : அக் 13, 2021
Share
Advertisement
நாகப்பட்டினம் : விளை நிலங்களை கையகப்படுத்தி, தொழிற்சாலை அமைக்கும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து, 40 கிராம விவசாயிகள், வீடுகளில் கறுப்புக் கொடி ஏற்றி விழிப்புணர்வு வாகன பேரணி நடத்தினர்.நாகை அடுத்த பனங்குடியில் 1992ல், சி.பி.சி.எல்., நிறுவனம் துவக்கப்பட்டது. இதற்காக கையகப்படுத்திய விளை நிலங்களில் 400 ஏக்கர் நிலத்தை தரிசாக போட்டதால், கருவேல மரங்கள் காடாக
 கறுப்பு கொடி ஏந்தி விவசாயிகள் பேரணி

நாகப்பட்டினம் : விளை நிலங்களை கையகப்படுத்தி, தொழிற்சாலை அமைக்கும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து, 40 கிராம விவசாயிகள், வீடுகளில் கறுப்புக் கொடி ஏற்றி விழிப்புணர்வு வாகன பேரணி நடத்தினர்.

நாகை அடுத்த பனங்குடியில் 1992ல், சி.பி.சி.எல்., நிறுவனம் துவக்கப்பட்டது. இதற்காக கையகப்படுத்திய விளை நிலங்களில் 400 ஏக்கர் நிலத்தை தரிசாக போட்டதால், கருவேல மரங்கள் காடாக மாறியுள்ளன.இந்நிலையில்,ஆலை விரிவாக்கத்திற்காக நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பனங்குடி, முட்டம், நரிமணம், உத்தமசோழபுரம், கோபுராஜபுரம் ஆகிய ஐந்து ஊராட்சிகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அரசிடம் வழங்கப்பட்டது.இருப்பினும் ஐந்து ஊராட்சிகளிலும் 600 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.

'பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட நிலையில், விளைநிலங்களில் கெமிக்கல் தொழிற்சாலைகள் அமைப்பதால் விவசாயம் அழிந்து விடும்.'எனவே, நிலம் கையகப்படுத்துவதை நிறுத்த வேண்டும்' என வலியுறுத்தி, ஐந்து ஊராட்சிகளைச் சேர்ந்த 40 கிராம விவசாயிகள், வீடுகளில் நேற்று கறுப்புக் கொடி ஏற்றினர்.தொடர்ந்து, சி.பி.சி.எல்., ஆலை வாசலில் இருந்து கறுப்புக் கொடியுடன் வாகனங்களில் பேரணியாக சென்று, விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X