பொது செய்தி

இந்தியா

மத்திய அமைச்சரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்; ஜனாதிபதியிடம் காங்., குழு கோரிக்கை

Updated : அக் 13, 2021 | Added : அக் 13, 2021 | கருத்துகள் (21)
Share
Advertisement
புதுடில்லி: 'லக்கிம்பூர் வன்முறை தொடர்பாக, மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்ய வேண்டும்' என கோரி, ராகுல், பிரியங்கா உட்பட காங்., தலைவர்கள் குழு இன்று (அக்.,13) ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடம் கோரிக்கை வைத்தனர்.உத்தர பிரதேசத்தின் லக்கிம்பூர் கேரியில் சமீபத்தில் நடந்த கலவரத்தில் நான்கு விவசாயிகள் உட்பட எட்டு பேர் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் மத்திய உள்துறை
Congress Leaders, President Ramnath Kovind, Lakhimpur Kheri, லக்கிம்பூர், வன்முறை, கலவரம், காங்கிரஸ் தலைவர்கள், குழு, ஜனாதிபதி, சந்திப்பு, கோரிக்கை

புதுடில்லி: 'லக்கிம்பூர் வன்முறை தொடர்பாக, மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்ய வேண்டும்' என கோரி, ராகுல், பிரியங்கா உட்பட காங்., தலைவர்கள் குழு இன்று (அக்.,13) ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடம் கோரிக்கை வைத்தனர்.

உத்தர பிரதேசத்தின் லக்கிம்பூர் கேரியில் சமீபத்தில் நடந்த கலவரத்தில் நான்கு விவசாயிகள் உட்பட எட்டு பேர் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா மகன் ஆஷிஷ் மிஸ்ரா கைதாகி உள்ளார். 'கலவரத்துக்கு பொறுப்பேற்று அமைச்சர் பதவியை அஜய் மிஸ்ரா ராஜினாமா செய்ய வேண்டும்' என எதிர்க்கட்சியான காங்கிரஸ் கூறி உள்ளது. இந்த வன்முறை தொடர்பாக காங்., கட்சியின் ஏழு பேர் குழு இன்று (அக்.,13) ஜனாதிபதியை சந்தித்து மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என மனு அளித்தனர்.


latest tamil news


காங்., எம்.பி., ராகுல், பொதுச் செயலர் பிரியங்கா, ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கட்சியின் மூத்த தலைவர்கள் ஏ.கே.அந்தோணி, குலாம்நபி ஆசாத் மற்றும் கே.சி.வேணுகோபால் ஆகியோர் இக்குழுவில் இடம்பெற்றிருந்தனர்.

ஜனாதிபதி உடனான சந்திப்பிற்கு பிறகு, செய்தியாளர்களிடம் ராகுல் கூறுகையில், ‛குற்றம் சாட்டப்பட்டவரின் தந்தை மத்திய அமைச்சராக இருப்பதால் நியாயமான விசாரணை சாத்தியமில்லை எனக்கூறி அவரை பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும் என ஜனாதிபதியிடம் கோரினோம். அதேபோல், உச்சநீதிமன்றத்தில் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு மூலம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை வைத்தோம்,' எனக் கூறினார்.


latest tamil news


மல்லிகார்ஜூன கார்கே கூறுகையில், ‛லக்கிம்பூர் கேரி சம்பவம் தொடர்பாக நாங்கள் ஜனாதிபதியிடம் அனைத்து விவரங்களையும் கொடுத்தோம். ஜனாதிபதியிடம் இரண்டு கோரிக்கைகளை முன்வைத்துள்ளோம். தற்போது பதவியிலிருக்கும் நீதிபதிகளால் சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் மற்றும் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா பதவி விலக வேண்டும் அல்லது பதவி நீக்கம் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தோம். அப்போதுதான் நீதி கிடைக்கும்,' என்றார்.

‛நாங்கள் வைத்த கோரிக்கை தொடர்பாக இன்று மத்திய அரசுடன் கலந்துரையாடுவதாக ஜனாதிபதி உறுதியளித்ததாக காங்., பொதுச்செயலர் பிரியங்கா கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
s t rajan - chennai,இந்தியா
13-அக்-202122:32:02 IST Report Abuse
s t rajan மேற்கு வங்காளத்தில் சமீபத்தில் நடந்த வன்முறை கொடூரங்களுக்கு ஏன் மம்தாவை பதவி விலகச் சொல்ல வில்லை ?
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
13-அக்-202121:33:59 IST Report Abuse
sankaseshan பொழுது போகவில்லை என்றால் ஜனாதிபதியின் நேரத்தை வேஸ்ட் பண்ணாதீங்க
Rate this:
Cancel
துயில் விரும்பி - coimbatore,இந்தியா
13-அக்-202120:29:45 IST Report Abuse
துயில் விரும்பி ஒரு நாட்டில் எதிர்க்கட்சி சரி இல்லை என்றால் ஆளும் கட்சி எப்படியெல்லாம் மக்களை வறுத்து எடுக்கலாம் என்பதை காணமுடிகிறது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X