பொது செய்தி

இந்தியா

தரமான உள்கட்டமைப்பால் வேலைவாய்ப்பு பெருகும்: 'கதிசக்தி' திட்டத்தை துவக்கி வைத்து பிரதமர் உரை

Updated : அக் 13, 2021 | Added : அக் 13, 2021 | கருத்துகள் (21)
Share
Advertisement
புதுடில்லி: '' தரமான உள்கட்டமைப்பு மூலம் பொருளாதாரம் வலுப்பெறுவதுடன், வேலைவாய்ப்பு பெருகும்'' என 'கதிசக்தி' திட்டத்தை துவக்கி வைத்து பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.நாட்டின் 75வது சுதந்திர தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, உள்கட்டமைப்பு, பொருளாதார மேம்பாட்டிற்காக ரூ.100 லட்சம் கோடி மதிப்பில் 'கதி சக்தி' திட்டம் செயல்படுத்தப்படும் என
கதிசக்தி, பிரதமர், நரேந்திரமோடி, மோடி, gatishakthi, Primeminister, Modi, Narendramodi

புதுடில்லி: '' தரமான உள்கட்டமைப்பு மூலம் பொருளாதாரம் வலுப்பெறுவதுடன், வேலைவாய்ப்பு பெருகும்'' என 'கதிசக்தி' திட்டத்தை துவக்கி வைத்து பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

நாட்டின் 75வது சுதந்திர தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, உள்கட்டமைப்பு, பொருளாதார மேம்பாட்டிற்காக ரூ.100 லட்சம் கோடி மதிப்பில் 'கதி சக்தி' திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவித்திருந்தார்.

இந்த திட்டத்தை துவக்கி வைத்து பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: அடுத்த 25 ஆண்டுக்கான அடித்தளத்தை நாங்கள் அமைத்துள்ளோம். தேசிய மாஸ்டர் பிளான் ஆனது, 21ம் நூற்றாண்டின் வளர்ச்சி திட்டங்களுக்கு 'கதி சக்தி' அளிப்பதுடன், இந்த திட்டங்களை குறிப்பிட்ட காலத்திற்குள் நிறைவு பெற உதவும்.

முந்தைய காலங்களில் திட்டங்கள் நடைபெறுகிறது என பதாகைகளை பல இடங்களில் பார்க்க முடியும். திட்டங்கள் துவக்கப்பட்டாலும், அது நிறைவு பெறாது. ஆனால், அதனை நாங்கள் மாற்றி உள்ளோம். நாங்கள் திட்டமிட்டு, வளர்ச்சி திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளோம். வளர்ச்சிக்கு தடையாக உள்ள விஷயங்கள் அகற்றப்படும். இலக்கு நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் திட்டப்பணிகளை முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.


latest tamil news


உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு எந்த கட்சியும் முன்னுரிமை அளிப்பது கிடையாது. அக்கட்சிகளின் தேர்தல் அறிக்கையிலும் இடம்பெற்றதில்லை. ஆனால், நிலையான வளர்ச்சிக்கு தரமான உள்கட்டமைப்பு அவசியம். இதன் மூலம் பொருளாதாரம் கட்டமைக்கப்படுவதுடன், வேலைவாய்ப்பு பெருகுகிறது. இவ்வாறு மோடி பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.Isaac - bangalore,இந்தியா
13-அக்-202120:48:56 IST Report Abuse
J.Isaac எழுபது ஆண்டுகளாக காவி உடையோடும் கோமணத்தோடும் தாடியோடும் நாடோடிகளாக மக்கள் வாழ்ந்தார்கள். கடந்த ஏழு ஆண்டுகளாக தான் மக்கள் முன்னேற்றம் அடைந்துள்ளார்கள். அதிலும் இரண்டு ஆண்டுகளில் பணக்கார பட்டியல் அதிகரித்துள்ளது
Rate this:
Visu Iyer - chennai,இந்தியா
14-அக்-202116:36:11 IST Report Abuse
Visu Iyerசில குப்பைகளை ஒதுக்கி தள்ள வேண்டும்.அவ்வளவு தான்...
Rate this:
Cancel
PKN - Chennai,இந்தியா
13-அக்-202119:32:50 IST Report Abuse
PKN வேலையிழப்பு களம் எண்ணிக்கைதான் அதிகரிக்கிறது.
Rate this:
Visu Iyer - chennai,இந்தியா
14-அக்-202116:37:14 IST Report Abuse
Visu Iyerசிலர் பேசுவதை பார்த்து சிரித்து விட்டு போக வேண்டும்.. அவ்வளவு தான்.....
Rate this:
Visu Iyer - chennai,இந்தியா
14-அக்-202116:43:57 IST Report Abuse
Visu Iyerமக்களிடம் நிறைய பணம் இருக்குதுன்னு அறிவு திறன் கொஞ்சம் அதிகமாக உள்ள உங்கள் நிதி அமைச்சர் சொல்லி இருக்கிறார்... செய்தியை பார்க்கவில்லையா...
Rate this:
Cancel
பாமரன் - நம்மூர்தான்,இந்தியா
13-அக்-202117:41:53 IST Report Abuse
பாமரன் கொஞ்சம் வைட் ஆங்கிள் போட்டோ போடலாம்ல... ஜீஜி ரெண்டு பக்கமும் இருக்கும் எலெக்ட்ரானிக் துண்டு சீட்டை பார்த்த படிக்கறத நாங்களும் பார்த்து மகிழ்வோம்ல...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X