மனைவி மீது பாம்பை கடிக்க செய்து கொலை; கணவனுக்கு 17 ஆண்டு கடுங்காவல் மற்றும் இரட்டை ஆயுள் தண்டனை

Updated : அக் 13, 2021 | Added : அக் 13, 2021 | கருத்துகள் (23)
Share
Advertisement
நாகர்கோவில்: பாம்பை கடிக்க வைத்து மனைவியை கொன்ற வழக்கில் கணவன் சூரஜ் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட நிலையில், அவருக்கு 17 ஆண்டு கடுங்காவல் மற்றும் அது முடிந்த பிறகு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி கொல்லம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ரூ.5 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டு உள்ளது.கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் அஞ்சல் பகுதியை சேர்ந்தவர் உத்ரா. கணவர் சூரஜ் அடூரை சேர்ந்தவர். கடந்த
மனைவி மீது பாம்பை கடிக்க செய்து கொலை; கணவனுக்கு 17 ஆண்டு கடுங்காவல் மற்றும் இரட்டை ஆயுள் தண்டனை

நாகர்கோவில்: பாம்பை கடிக்க வைத்து மனைவியை கொன்ற வழக்கில் கணவன் சூரஜ் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட நிலையில், அவருக்கு 17 ஆண்டு கடுங்காவல் மற்றும் அது முடிந்த பிறகு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி கொல்லம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ரூ.5 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டு உள்ளது.
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் அஞ்சல் பகுதியை சேர்ந்தவர் உத்ரா. கணவர் சூரஜ் அடூரை சேர்ந்தவர். கடந்த 2020ம் ஆண்டு மே 7-ம் தேதி தாய் வீட்டில் மாடி ஏ.சி., அறையில் துாங்கி கொண்டிருந்த உத்ரா பாம்பு கடித்து இறந்தார். உறவினர்களுக்கு இந்த மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டதையடுத்து, போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சூரஜ்ஜிடம் விசாரித்த போது உண்மை வெளிச்சத்துக்கு வந்தது. இதை தொடர்ந்து சூரஜ், பாம்பு வழங்கிய சுரேஷ் கைது செய்யப்பட்டனர்.


latest tamil news


இந்த வழக்கில் அப்ரூவராக மாறிய சுரேஷ், மனநலம் பாதிக்கப்பட்ட மனைவியை கொல்ல வேண்டும் என்று கூறி சூரஜ் பாம்பை வாங்கியதாக வாக்குமூலம் கொடுத்தார். பாம்பு வேகமாக கடிப்பதற்காக அதை ஏழு நாள் பட்டினி போட்ட மருத்துவ பரிசோதனை அறிக்கை உட்பட 288 ஆதாரங்கள், 40 பொருட்கள், 87 சாட்சிகள் ஆஜர்படுத்தப்பட்டனர். இதனையடுத்து கடந்த அக்.,11ல் கொல்லம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சூரஜ், குற்றவாளி என நீதிபதி மனோஜ் தீர்ப்பளித்தார். அவரின் தண்டனை விவரங்களை இன்று (அக்.,13) வெளியிட்ட நீதிமன்றம், குற்றவாளி சூரஜ்-க்கு 17 ஆண்டு கடுங்காவல் மற்றும் அது முடிந்த பிறகு இரட்டை ஆயுள் தண்டனை , ரூ.5 லட்சம் அபராதமும் விதித்து கொல்லம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
14-அக்-202106:25:09 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் ஜெயில்லே நாலு நல்ல பாம்போட இருக்கணும்ன்னு ஒரு போனஸ் தண்டனை கொடுங்க யுவர் ஆனர் ..
Rate this:
Cancel
Mohan - Thanjavur ,இந்தியா
13-அக்-202122:12:18 IST Report Abuse
Mohan முதல் 17 வருஷம், அதன்பிறகு இரட்டை ஆயுள் தண்டனை. அதுவரை இவனுக்கு ஆகும் செலவு முழுதும் மக்களின் தலையில். தமிழன் தாங்குவான். இப்போ பிடிபட்ட 2000 ரவுடிகளுக்கு சோறு போடலியா என்ன.
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
13-அக்-202120:57:46 IST Report Abuse
Vena Suna சாகும் வரை பாம்பால் கடிக்க வைத்து இவனுக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X