மாஜி ஊராட்சி தலைவர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு

Added : அக் 13, 2021
Share
Advertisement
திருப்பூர் : அங்கீகரிக்கப்படாத மனையிடங்களுக்கு, தடையின்மை சான்று வழங்கியதில், அரசுக்கு 3.28 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியது தொடர்பாக, ஊராட்சி முன்னாள் தலைவர் மீது மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.திருப்பூர் மாவட்டம், தாராபுரம், கொண்டரசம்பாளையத்தை சேர்ந்தவர் உதயகுமார், 45. அ.தி.மு.க., லட்சுமி நகர் கிளை செயலாளர். இவர் கவுண்டச்சிபுதுார் ஊராட்சியில், 2011 -
 மாஜி ஊராட்சி தலைவர் மீது  லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு


திருப்பூர் : அங்கீகரிக்கப்படாத மனையிடங்களுக்கு, தடையின்மை சான்று வழங்கியதில், அரசுக்கு 3.28 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியது தொடர்பாக, ஊராட்சி முன்னாள் தலைவர் மீது மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

திருப்பூர் மாவட்டம், தாராபுரம், கொண்டரசம்பாளையத்தை சேர்ந்தவர் உதயகுமார், 45. அ.தி.மு.க., லட்சுமி நகர் கிளை செயலாளர். இவர் கவுண்டச்சிபுதுார் ஊராட்சியில், 2011 - 2016 வரை தலைவராக இருந்தார்.அப்போது, அங்கீகரிக்கப்படாத மனையிடங்களுக்கு விதிமுறைகளை மீறி தடையின்மை சான்று வழங்கியதாக புகார் எழுந்து வந்தது. இதில், 3 கோடியே 28 லட்சத்து, 71 ஆயிரத்து, 535 ரூபாய் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக, ஊராட்சி தலைவர் உதயகுமார் மீது ஊழல் தடுப்பு சட்டத்தில், திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறுகையில், 'ஊராட்சி பகுதியில், 26 இடங்கள் லே-அவுட் அமைத்து விற்க, விதிமுறைகளை மீறி தடையின்மை சான்றுகளை வழங்கியுள்ளார். இது குறித்து விசாரிக்கிறோம்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X