பொது செய்தி

தமிழ்நாடு

8 மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

Updated : அக் 13, 2021 | Added : அக் 13, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
சென்னை: ‛‛நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும்,'' என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாகஇன்று (அக்.,13ம் தேதி): நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், கடலுார்,
Tamilnadu, 8District, HeavyRain, Weather Report, தமிழகம், 8 மாவட்டங்கள், கனமழை, சென்னை, வானிலை, ஆய்வு மையம், அறிவிப்பு

சென்னை: ‛‛நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும்,'' என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:


latest tamil news



வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக



இன்று (அக்.,13ம் தேதி): நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், கடலுார், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், ராணிப்பேட்டை மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

நாளை 14ம் தேதி: நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழையும், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலுார், சேலம், ஈரோடு, திருவள்ளூர், வேலுார், திருப்பத்துார் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.


latest tamil news



அக்.,15ம் தேதி: நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழையும், ஈரோடு, சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலுார், பெரம்பலுார், திருவள்ளூர், மதுரை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், ஏனைய தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அக்.,16ம் தேதி: நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழையும், கன்னியாகுமரி, தர்மபுரி, சேலம்,நாமக்கல், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், அரியலுார், பெரம்பலுார் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய வட மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், ஏனைய தென் மாவட்டங்களில் ஒரு சிலஇடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.


latest tamil news


அக்.,17ம் தேதி: சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருப்பத்துார், திருவண்ணாமலை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், தென் மாவட்டங்களில் ஒரு சிலஇடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.


சென்னையை பொறுத்தவரை:


அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.


கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைஅளவு:


ஜமுனாமரத்துார் (திருவண்ணாமலை) 8 செ.மீ., ராசிபுரம் (நாமக்கல்), செங்கல்பட்டு தலா 7 செ.மீ., தாமரைப்பாக்கம் (திருவள்ளூர்), சீர்காழி (மயிலாடுதுறை), கொரட்டூர் (திருவள்ளூர்) தலா 6 செ.மீ., செய்யார் (திருவண்ணாமலை), தேவலா (நீலகிரி), தளி (கிருஷ்ணகிரி), பூதலுார் (தஞ்சாவூர்), சோலையார் (கோவை), திருக்கழுக்குன்றம் (செங்கல்பட்டு), சோழிங்கநல்லுார் (சென்னை), கள்ளக்குறிச்சி தலா 5 செ.மீ., எடப்பாடி (சேலம்), மாரண்டஹள்ளி (தர்மபுரி), சின்னக்கல்லார் (கோவை), குடவாசல் (திருவாரூர்), காட்பாடி (வேலுார்), திண்டிவனம் (விழுப்புரம்), தஞ்சாவூர், ஓமலுார் (சேலம்), தேன்கனிக்கோட்டை (கிருஷ்ணகிரி), கடவனுார் (கள்ளக்குறிச்சி) தலா 4 செ.மீ., மழைப் பதிவாகியுள்ளது.


latest tamil news



குறிப்பு: அடுத்த 24 மணி நேரத்தில் அந்தமான் மற்றும் அதை ஒட்டியுள்ள மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் 15ம் தேதி ஆந்திரா- ஒடிசா கடற்கரையை நோக்கி நகரக்கூடும்.


மீனவர்களுக்கான எச்சரிக்கை:



வங்கக்கடல் பகுதிகள்:


இன்று 14 முதல் 16ம் தேதி வரை: தென்மேற்கு வங்கக்கடல், குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளி மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.


அரபிக்கடல் பகுதிகள்:


இன்று 14, நாளை 15ம் தேதி: தென்கிழக்கு அரபிக்கடல், கேரள மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு புவியரசன் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
பில்கேட்ஸ், கோவை இங்கு கோவையில் வெயில் மண்டையை பிளக்கிறது
Rate this:
Cancel
sundarsvpr - chennai,இந்தியா
13-அக்-202113:51:19 IST Report Abuse
sundarsvpr வடகிழக்கு பருவ காற்று தொடங்கவில்லை. தமிழகத்தின் பெருவாரியான ஏரி கண்மாய் குளங்கள் நிரம்பி விட்டுள்ளது. இதற்கு காரணம் தூர் வாராமை என்பது இருந்தாலும் வடகிழக்கு பருவ காற்று எவ்வாறு அரசு எதிர்கொள்ளும் என்பது ஒருபுறம் இருந்தாலும் மக்கள் என்ன செய்யவேண்டும் என்பதை தண்டோரா மூலம் அறிவிக்கவேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X