சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: மெக்கானிக் மீது

Added : அக் 13, 2021
Share
Advertisement
தஞ்சாவூர் : தஞ்சாவூரில் சிறுமியை காரில் கடத்திச் சென்று பாலியல் தொல்லை கொடுத்த மெக்கானிக்கை போக்சோவில் போலீசார் கைது செய்தனர்.தஞ்சாவூர் அருகே ப்ளஸ் 2 படிக்கும், 17 வயது சிறுமி அண்மையில் பள்ளி செல்லும் பஸ்சை தவற விட்டார். இதையடுத்து கீழவஸ்தாசாவடியைச் சேர்ந்த அவரது உறவினரான கார் மெக்கானிக் அக்பர் அலியுடன், 38, டூவீலரில் சிறுமியை பெற்றோர் பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.

தஞ்சாவூர் : தஞ்சாவூரில் சிறுமியை காரில் கடத்திச் சென்று பாலியல் தொல்லை கொடுத்த மெக்கானிக்கை போக்சோவில் போலீசார் கைது செய்தனர்.
தஞ்சாவூர் அருகே ப்ளஸ் 2 படிக்கும், 17 வயது சிறுமி அண்மையில் பள்ளி செல்லும் பஸ்சை தவற விட்டார். இதையடுத்து கீழவஸ்தாசாவடியைச் சேர்ந்த அவரது உறவினரான கார் மெக்கானிக் அக்பர் அலியுடன், 38, டூவீலரில் சிறுமியை பெற்றோர் பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். பாதி வழியில் சென்றபோது, பெட்ரோல் தீர்ந்துவிட்டதாக அக்பர் அலி கூறி, அச்சிறுமியை காரில் அழைத்துச் சென்றார். சிறுமியை வேறு பாதையில் அழைத்துச் சென்று அக்பர் அலி, 7 மணி நேரமாக காரில் வைத்து அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்

.மாலையில் வீடு திரும்பிய சிறுமி, தனது பெற்றோரிடம் நடந்த சம்பவத்தை கூறி அழுதுள்ளார். வல்லம் அனைத்து மகளிர் போலீசில் பெற்றோர் புகார் செய்தனர். அதன் பேரில், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, நேற்று முன்தினம் இரவு அக்பர் அலியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X