பொது செய்தி

இந்தியா

இந்தியாவில் 'பூஸ்டர்' தடுப்பூசி: 3வது கட்ட பரிசோதனைக்கு விரைவில் அனுமதி

Updated : அக் 13, 2021 | Added : அக் 13, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
புதுடில்லி: ஐதராபாத்தைச் சேர்ந்த பயாலஜிக்கல் - இ நிறுவனம் தங்களது 'கோர்பேவேக்ஸ்' தடுப்பூசியின் 3வது கட்ட பரிசோதனைக்கு அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளது.கோவிட் வைரசுக்கு எதிராக, ஐதராபாத்தைச் சேர்ந்த 'பயாலஜிக்கல் -இ' என்ற மருந்து நிறுவனம், 'கோர்பேவேக்ஸ்' என்ற தடுப்பூசியை தயாரித்து உள்ளது. இந்நிறுவனம் 3வது கட்ட பரிசோதனை நடத்த அனுமதி கோரி, இந்திய தலைமை மருந்து

புதுடில்லி: ஐதராபாத்தைச் சேர்ந்த பயாலஜிக்கல் - இ நிறுவனம் தங்களது 'கோர்பேவேக்ஸ்' தடுப்பூசியின் 3வது கட்ட பரிசோதனைக்கு அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளது.latest tamil news
கோவிட் வைரசுக்கு எதிராக, ஐதராபாத்தைச் சேர்ந்த 'பயாலஜிக்கல் -இ' என்ற மருந்து நிறுவனம், 'கோர்பேவேக்ஸ்' என்ற தடுப்பூசியை தயாரித்து உள்ளது. இந்நிறுவனம் 3வது கட்ட பரிசோதனை நடத்த அனுமதி கோரி, இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகத்தில் விண்ணப்பித்து உள்ளது. விண்ணப்பத்தில் தெரிவித்து உள்ளதாவது:
தற்போது இரு தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்ட பலரது உடலில் நோய் எதிர்ப்புச்சக்தி குறைந்து வருகிறது. அதனால் சில நாடுகள் 'பூஸ்டர் டோஸ்' தடுப்பூசி போடத்தொடங்கி உள்ளன. வேறு சில நாடுகள் அதற்கான நடவடிக்கையில் இறங்கி உள்ளன.


latest tamil news
கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய இரண்டில் எந்த தடுப்பூசியின் இரு தவணைகளை செலுத்தி இருந்தாலும் இந்த, 'கோர்பேவேக்ஸ்' தடுப்பூசியை 3-வது பூஸ்டர் டோசாக செலுத்திக் கொள்ளலாம். இந்த தடுப்பூசியை 18 முதல் 80 வயதானவர்களுக்கு செலுத்தலாம்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த தடுப்பூசிக்கு விரைவில் அனுமதி கிடைத்து, 3வது கட்ட பரிசோதனை தொடங்கி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vena Suna - Coimbatore,இந்தியா
13-அக்-202115:19:14 IST Report Abuse
Vena Suna தேவையில்லை என்று ஐ சி எம் ஆர் சொன்னதே. பிறகு திரும்ப எதற்கு அதனைப்பற்றி தேவையில்லாமல் பேச்சு. அது தேவையில்லாத ஒன்று.
Rate this:
Cancel
Srinivas -  ( Posted via: Dinamalar Android App )
13-அக்-202114:27:01 IST Report Abuse
Srinivas This was anticipated from July itself. With immunity after both vaccination doses known to slowly reduce, there was bound to be a booster shot. Doesnt come as a surprise.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X