பொது செய்தி

தமிழ்நாடு

கட்டுமான நிறுவனத்துக்கு 'வாரன்ட்' ரியல் எஸ்டேட் ஆணையம் உத்தரவு

Added : அக் 13, 2021
Share
Advertisement
சென்னை : வீடு கிடைக்காமல் பாதிக்கப்பட்டோருக்கு, உரிய இழப்பீடை வழங்க மறுக்கும் கட்டுமான நிறுவனம் மீது வாரன்ட் பிறப்பிக்க, ரியல் எஸ்டேட் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.செங்கல்பட்டு மாவட்டம் படூரில், தனியார் கட்டுமான நிறுவனம் அறிவித்த குடியிருப்பு திட்டத்தில் வீடு வாங்க, உதயகுமாரி, பிரசாந்த் துரை ஆகியோர் பணம் செலுத்தினர். இதற்கான ஒப்பந்தப்படி, அந்நிறுவனம் வீட்டை


சென்னை : வீடு கிடைக்காமல் பாதிக்கப்பட்டோருக்கு, உரிய இழப்பீடை வழங்க மறுக்கும் கட்டுமான நிறுவனம் மீது வாரன்ட் பிறப்பிக்க, ரியல் எஸ்டேட் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் படூரில், தனியார் கட்டுமான நிறுவனம் அறிவித்த குடியிருப்பு திட்டத்தில் வீடு வாங்க, உதயகுமாரி, பிரசாந்த் துரை ஆகியோர் பணம் செலுத்தினர். இதற்கான ஒப்பந்தப்படி, அந்நிறுவனம் வீட்டை ஒப்படைக்கவில்லை.இதனால், அவர்கள் ரியல் எஸ்டேட் ஆணையத்தில் முறையிட்டனர். இந்த புகாரை விசாரித்த ஆணையம், இழப்பீடு வழங்க கட்டுமான நிறுவனத்துக்கு உத்தரவிட்டது.இந்த உத்தரவை அமல்படுத்தாமல், கட்டுமான நிறுவனம் தாமதம் செய்வதாக மீண்டும் புகார் எழுந்தது.

இதை விசாரித்த ஆணைய விசாரணை அலுவலர் சரவணன் பிறப்பித்த உத்தரவு:
மனுதாரர் தொடர்ந்த வழக்கில், ஆணையம் பிறப்பித்த உத்தரவுப்படி இழப்பீட்டை அளிக்க, கட்டுமான நிறுவனம் மறுப்பது தெரியவருகிறது. எனவே, வருவாய் துறை சட்டப்படி, அந்நிறுவனத்திடம் இருந்து இழப்பீட்டு தொகையை வசூலிக்க, மாவட்ட கலெக்டர் வாரன்ட் பிறப்பிக்கலாம்.
இவ்வாறு, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X