ஒரு லட்சம் மின் கம்பங்கள் தயார்

Added : அக் 13, 2021
Share
Advertisement
கரூர் : ''பருவமழை காலங்களில் ஏற்படும் பாதிப்புகளை சீர் செய்ய, ஒரு லட்சம் மின்கம்பங்கள் தயார் நிலையில் உள்ளன,'' என, அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.அவர் அளித்த பேட்டி:தமிழகத்தில் அனல் மின் உற்பத்தி மூலம், 4,320 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திறன் இருந்தும், 1,800 மெகாவாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டது. இதற்கு முக்கிய காரணம், தனியாரிடமிருந்து


கரூர் : ''பருவமழை காலங்களில் ஏற்படும் பாதிப்புகளை சீர் செய்ய, ஒரு லட்சம் மின்கம்பங்கள் தயார் நிலையில் உள்ளன,'' என, அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.

அவர் அளித்த பேட்டி:
தமிழகத்தில் அனல் மின் உற்பத்தி மூலம், 4,320 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திறன் இருந்தும், 1,800 மெகாவாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டது. இதற்கு முக்கிய காரணம், தனியாரிடமிருந்து மின்சாரம் கொள்முதல் செய்ததே. மேலும், மின் உற்பத்தி நிலையங்களை முறையாக பராமரிக்கவில்லை. தற்போது, 3,500 மெகாவாட் மின்சார உற்பத்தியை அதிகரிக்க பூர்வாங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.கடந்த ஆட்சியை விட, 70 சதவீதம் மின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டு வருகிறது. மேலும், பருவமழை காலங்களில் ஏற்படும் பாதிப்புகளை சீர் செய்ய, ஒரு லட்சம் மின்கம்பங்கள் தயார் நிலையில் உள்ளன என கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X