பிரான்சில் கோர விபத்து: தண்டவாளத்தில் உறங்கிய அகதிகள் மீது ரயில் ஏறியதில் மூவர் பலி

Updated : அக் 13, 2021 | Added : அக் 13, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
பாரீஸ்: பிரான்சின் பியாரிட்ஸ் நகரில் தண்டவாளத்தில் படுத்திருந்த அகதிகள் மீது ரயில் ஏறியதில் மூவர் உயிரிழந்தனர்; ஒருவர் படுகாயம் அடைந்தார்.பிரான்சின் தென்மேற்கு பகுதியில் உள்ள கடற்கரை நகர் பியாரிட்ஸ். இது பிரான்சுக்கு வரும் அகதிகளுக்கான பிரதான வழித்தடமாக உள்ளது. பல்வேறு நாடுகளில் இருந்து வரும் அகதிகள், இந்த நகரில் இருந்துதான் பிரான்சின் பிற இடங்களுக்கு

பாரீஸ்: பிரான்சின் பியாரிட்ஸ் நகரில் தண்டவாளத்தில் படுத்திருந்த அகதிகள் மீது ரயில் ஏறியதில் மூவர் உயிரிழந்தனர்; ஒருவர் படுகாயம் அடைந்தார்.



latest tamil news


பிரான்சின் தென்மேற்கு பகுதியில் உள்ள கடற்கரை நகர் பியாரிட்ஸ். இது பிரான்சுக்கு வரும் அகதிகளுக்கான பிரதான வழித்தடமாக உள்ளது. பல்வேறு நாடுகளில் இருந்து வரும் அகதிகள், இந்த நகரில் இருந்துதான் பிரான்சின் பிற இடங்களுக்கு செல்கின்றனர்.


latest tamil news



பியாரிட்ஸ் நகருக்கு வந்த அகதிகள் சிலர், நேற்று முன்தினம் இரவு அங்குள்ள ரயில் தண்டவாளத்தில் படுத்து உறங்கியதாக கூறப்படுகிறது. உள்ளூர் நேரப்படி நேற்று அதிகாலை 6:00 மணிக்கு இந்த தண்டவாளத்தில் வந்த ரயில் அவர்கள் மீது ஏறியது. இந்த கோர சம்பவத்தில் அகதிகள் 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் ஒருவருக்கு கால் உடைந்தது. இறந்தவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kalaiselvan Periasamy - kuala lumpur,மலேஷியா
14-அக்-202105:35:29 IST Report Abuse
Kalaiselvan Periasamy இது தேவையா ? சொந்த நாட்டில் இருக்காமல் அகதிகள் என்ற பெயரில் வெளிநாடு சென்றால் என்ன செய்வது . முதலில் அகதிகள் உருவாகாமல் இருக்க எல்லா நாடுகளும் முயற்சி செய்ய வேண்டும் . எந்த நாடு தன மக்களையே கொடுமை செய்கிறதோ அந்த நாட்டை ஐநா தலைமையில் போர் தொடுக்க வேண்டும் .
Rate this:
Cancel
Mohan - Thanjavur ,இந்தியா
13-அக்-202122:02:49 IST Report Abuse
Mohan புத்திசாலிகள் பிரான்சிலும் இருக்கிறார்கள். RIP.
Rate this:
Cancel
13-அக்-202121:33:23 IST Report Abuse
அப்புசாமி இங்கே புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் 15 பேரை ரயில ஏத்தி கொன்னாங்களே...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X