தி.மு.க.,வின் வெற்றி புறவாசல் வழியாகப் பெற்ற வெற்றி: அ.தி.மு.க., குற்றச்சாட்டு

Updated : அக் 13, 2021 | Added : அக் 13, 2021 | கருத்துகள் (56) | |
Advertisement
சென்னை: ஊரக உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க., பெற்ற வெற்றி புறவாசல் வழியாகப் பெற்ற வெற்றி என குற்றம் சாட்டியுள்ள அ.தி.மு.க., சட்ட விதிமீறல்களையும் தேர்தல் ஆணையத்தின் கையாலாகாத்தனத்தையும் நீதிமன்றத்தில் எடுத்துரைத்து ஜனநாயகத்தின் முன் வெளிப்படுத்திக் காட்டுவதாகவும் கூறியுள்ளது.தமிழகத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை நேற்று
ADMK, LocalBodyElection, Election Result, DMK, Victory, Tamilnadu, OPS, Pannerselvam, EPS, Palanisamy, அதிமுக, உள்ளாட்சி தேர்தல், முடிவுகள், திமுக, வெற்றி, புறவாசல் வெற்றி, ஓபிஎஸ், பன்னீர்செல்வம், இபிஎஸ், பழனிசாமி

சென்னை: ஊரக உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க., பெற்ற வெற்றி புறவாசல் வழியாகப் பெற்ற வெற்றி என குற்றம் சாட்டியுள்ள அ.தி.மு.க., சட்ட விதிமீறல்களையும் தேர்தல் ஆணையத்தின் கையாலாகாத்தனத்தையும் நீதிமன்றத்தில் எடுத்துரைத்து ஜனநாயகத்தின் முன் வெளிப்படுத்திக் காட்டுவதாகவும் கூறியுள்ளது.

தமிழகத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை நேற்று (அக்.,12) காலை முதல் நடைபெற்று வருகிறது. இதில் மொத்தமுள்ள 140 மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் 138 இடங்களை தி.மு.க., வெற்றிப்பெற்றது. 2 இடங்களில் மட்டுமே அ.தி.மு.க., வென்றது. அதேபோல், 1,381 இடங்களுக்கான ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் ஆயிரம் இடங்களுக்கு மேல் தி.மு.க., கைப்பற்றியது. பல இடங்களில் அ.தி.மு.க.,வுக்கு பெருத்த பின்னடைவு ஏற்பட்டுள்ளது. தேர்தல் முடிவுகள் தொடர்பாக அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:latest tamil news


அராஜகத்தின் அத்தியாயம் தி.மு.க., நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலின் வரலாறு காணாத வன்முறையையும், ஜனநாயகம் காணாத அக்கிரமங்களையும் கட்டவிழ்த்துவிட்டு மிகப்பெரிய தேர்தல் வன்முறையையும் நடத்தி முடித்திருக்கிறது. அ.தி.மு.க., ஆட்சியில் இரு சட்டசபை தேர்தல்கள், இரு லோக்சபா தேர்தல்கள், இரு ஊரக உள்ளாட்சி தேர்தல்களை ஒரே கட்டமாக நடத்தி முடித்திருக்கிறோம். ஆனால், 9 மாவட்டங்களுக்கு மட்டுமான ஊரக உள்ளாட்சி தேர்தலை தி.மு.க., அரசு இரண்டு கட்டங்களாக நடத்த முயல்கிறது ஏதோ உள் அர்த்தம் இருக்கிறது. தி.மு.க., அரசும், தேர்தல் ஆணையமும் ஒன்றாக கரம் கோர்த்து வாக்காளர்களை துச்சமென மதித்து செயல்பட்டிருக்கிறது.ஓட்டுப்பதிவு நாளன்று பல இடங்களில் வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டது. அதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என அ.தி.மு.க., சார்பில் தேர்தல் ஆணையத்தில் மனு கொடுத்தும், உரிய நடவடிக்கையை எடுக்க தவறியிருக்கிறது. பல இடங்களில் ஓட்டு எண்ணிக்கை மிகவும் தாமதமாக வேண்டுமென்றே உள்நோக்கத்தோடு தாமதப்படுத்தி இருக்கிறார்கள். பல இடங்களில் அ.தி.மு.க., வேட்பாளர்கள் வெற்றி பெற்ற பிறகும் அந்த வெற்றியை அறிவிப்பதற்கு தேர்தல் ஆணையமும், தேர்தல் அலுவலர்களும் முனைப்புக் காட்டவில்லை. வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வழங்குவதற்கும் தேர்தல் அதிகாரிகள் மறுத்திருக்கிறார்கள்.latest tamil news


இதுபோன்ற ஜனநாயகப் படுகொலை தி.மு.க., நடத்தும் என்பதை முன்கூட்டியே அறிந்ததால், அ.தி.மு.க., சட்ட ஆலோசனைக் குழு மூலம் 7 புகார் மனுக்களை தேர்தல் ஆணையத்திடம் வழங்கியிருக்கிறோம். இந்த சட்ட விதிமீறல்களையும் தேர்தல் ஆணையத்தின் கையாலாகாத்தனத்தையும் நீதிமன்றத்தில் எடுத்துரைத்து நியாயம் பெற்று இந்த தேர்தலில் தி.மு.க., பெற்ற வெற்றி புறவாசல் வழியாகப் பெற்ற வெற்றி என்பதை கண்டிப்பாக சட்டத்தின் முன், ஜனநாயகத்தின் முன் வெளிப்படுத்திக் காட்டுவோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (56)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Arachi - Chennai,இந்தியா
15-அக்-202120:23:48 IST Report Abuse
Arachi ADMK failed to adress the people issues and in fact they lacked the administrative capacity. Where as DMK reached the people of unreachable therefore they win the hearts of poorest of the people. Our people are the best judges. Had he been a person of self conscious he should have been ready to handover the power of the party to Sasikala. Accept your defeat, rectify and work hard to come to power. Of course it is not that easy.
Rate this:
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
14-அக்-202103:42:20 IST Report Abuse
meenakshisundaram இன்னா செய்ரது தலீவா ?தமிழனுங்க சந்தனம் ரொம்ப மிஞ்சிக் கிடிச்சுன்னு உடம்பிலே கண்டா இடத்திலே பூசிக்கிறானுவோ உள்ளாட்சியியிலும் அவுகலேவா ?
Rate this:
Cancel
Arachi - Chennai,இந்தியா
14-அக்-202101:08:25 IST Report Abuse
Arachi திமுக உள்ளாட்சி தேர்தலில் புறவாசல் வழியாக பெற்ற வெற்றி என்று சொல்லிருக்கிறார். இவரிடம் இருந்து இதைத்தான் எதிர்பார்க்க முடியும். ஏனென்றால் இவர் புறவாசல் வழியாகத்தான் முதலமைச்சராக வந்தவர்.அதனால் இவருக்கு புத்தி இப்படித்தான் போகும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X