பழைய 'கெட்-அப்'பில் மோடி: சமூக வலைதளங்களில் வைரல்

Updated : அக் 13, 2021 | Added : அக் 13, 2021 | கருத்துகள் (31)
Share
Advertisement
புதுடில்லி: நீண்ட முடி, தாடியுடன் காணப்பட்ட பிரதமர் நரேந்திர மோடி, தற்போது, அதனை திருத்தம் செய்துள்ளார். இது குறித்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.பிரதமர் நரேந்திர மோடி எப்போதும் தனது உடல் எடை, உடை, தோற்றம் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளித்து வருவார். உடல் நலனை பேண தினமும் யோகா செய்வதை வழக்கமாக வைத்துள்ளார். வெள்ளை தாடி, முடியுடன் எப்போதும் வலம்
primeminister, Modi, Narendramodi, Pmmodi, beard, பிரதமர், மோடி, நரேந்திரமோடி, தாடி,

புதுடில்லி: நீண்ட முடி, தாடியுடன் காணப்பட்ட பிரதமர் நரேந்திர மோடி, தற்போது, அதனை திருத்தம் செய்துள்ளார். இது குறித்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.


latest tamil news




பிரதமர் நரேந்திர மோடி எப்போதும் தனது உடல் எடை, உடை, தோற்றம் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளித்து வருவார். உடல் நலனை பேண தினமும் யோகா செய்வதை வழக்கமாக வைத்துள்ளார். வெள்ளை தாடி, முடியுடன் எப்போதும் வலம் வருவார். அதனை சரியான அளவில் 'ட்ரிம்' செய்து வைத்திருப்பார். ஆனால், ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக தாடியுடன் காணப்பட்டார்.

கோவிட் பரவ துவங்கியதும் தாடியை ட்ரிம் செய்வதை நிறுத்திவிட்டார். நோபல் பரிசு பெற்ற கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் போல தாடி வளர்ந்தது. மோடிக்கு முடி திருத்தம் செய்வதற்கு ஐந்துக்கும் மேற்பட்டவர்கள், பிரதமர் வீட்டிலேயே இருக்கின்றனர். கொரோனாவிலிருந்து பிரதமரைப் பாதுகாக்க, முடி திருத்துபவர்களை, பிரதமரை நெருங்க பாதுகாப்பு அதிகாரிகள் அனுமதி அளிக்கவில்லை என தகவல் வெளியானது.


latest tamil news


Advertisement



நீண்ட தாடியுடனேயே வலம் வந்த மோடி, அரசு நிகழ்ச்சிகள், விழாக்கள், தமிழகம், மே.வங்கம், அசாம் உள்ளிட்ட பல மாநில சட்டசபை பிரசாரங்களிலும் ஈடுபட்டார்.


latest tamil news




இந்நிலையில், தற்போது, மோடி தனது முடி, தாடியை திருத்தம் செய்து பழைய 'கெட் அப்'பிற்கு மாறி உள்ளார். கடைசியாக பிரபல பங்கு வர்த்தகரும், தொழில் அதிபருமான ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவை கடந்த 5ம் தேதி சந்தித்த போது தாடியுடன் காணப்பட்டார்.


latest tamil news




அதற்கு அடுத்த நாள் நடந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்ற போது, மோடி தாடியை ட்ரிம் செய்து காணப்பட்டார். தாடியை டிரிம் செய்த நிலையில் உள்ள மோடியின் புகைப்படத்தை பா.ஜ.,வினர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக்கி உள்ளனர்.


latest tamil news



Advertisement




வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
14-அக்-202113:36:21 IST Report Abuse
பாமரன் இந்த செய்தி மூலமா ஏழைத்தாயின் மவனோட சொகுசு வாழ்க்கையை போட்டு குடுத்ததில் ஏதாவது உள்குத்து இருக்குமோ...🤔🤔
Rate this:
Cancel
14-அக்-202113:31:31 IST Report Abuse
பாமரன் நாட்டில் வளர்ச்சி இருந்தது ஜிஜியோட தாடி மற்றும் பெட்ரோலிய பொருட்கள் விலையில் மட்டுமே...🤔 தாடியை குறைச்சதில் ஜிஜி மற்றும் பகோடாஸ் ஹாப்பி... அதேபோல் பெட்ரோலிய பொருட்கள் விலையையும் குறைச்சா பாமரனும் ஹாப்பி அண்ணாச்சி...🙄 பிளீஜ் கன்ஜிடர்....
Rate this:
Cancel
Gopal - Jakarta,இந்தோனேசியா
14-அக்-202105:41:08 IST Report Abuse
Gopal சூப்பர் தலை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X