பொது செய்தி

தமிழ்நாடு

சுற்றுலாத்துறைக்கு தொழில்துறை அங்கீகாரம் அளிக்கும் வகையில் புதிய சுற்றுலா கொள்கை

Added : அக் 13, 2021
Share
Advertisement
ஊட்டி: ஊட்டியில், சுற்றுலாத்துறை பங்குதாரர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. பின், சுற்றுலா துறை இயக்குனர் சந்திப் நந்தூரி நிருபர்களிடம் கூறுகையில்,' உள்நாட்டு சுற்றுலாப்பயணிகளை அதிகளவு கவர்வதில் முதலிடத்திலும், வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளை கவர்வதில் இரண்டாம் இடத்தில் தமிழகம் உள்ளது. மாநிலத்தை முன்மாதிரியாக கொண்டு வர, பல்வேறு ஆக்கப்பூர்வமான



ஊட்டி: ஊட்டியில், சுற்றுலாத்துறை பங்குதாரர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.

பின், சுற்றுலா துறை இயக்குனர் சந்திப் நந்தூரி நிருபர்களிடம் கூறுகையில்,' உள்நாட்டு சுற்றுலாப்பயணிகளை அதிகளவு கவர்வதில் முதலிடத்திலும், வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளை கவர்வதில் இரண்டாம் இடத்தில் தமிழகம் உள்ளது. மாநிலத்தை முன்மாதிரியாக கொண்டு வர, பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சுற்றுலாத்துறைக்கு தொழில்துறை அங்கீகாரம் அளிக்கும் வகையில் புதிய சுற்றுலா கொள்கை வகுக்கப்பட்டு வருகிறது. அன்றாட சுற்றுலாவை தவிர சாகச சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில் மாநிலத்தில், 15 இடங்களில் சாகச சுற்றுலா மையங்கள் ஏற்படுத்தப்படும்.

இதில், நீலகிரியில், காமராஜசாகர் நீர்த்தேக்கம், படகு இல்லம் இடம் பெறுகிறது. அதிகளவு சுற்றுலாப்பயணிகள் வரும் கொடைக்கானல், ராமேஸ்வரம் ஆகிய இடங்களில் ஹெலிகாப்டர் சுற்றுலா அறிமுகப்படுத்த தலா 50 லட்ச ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் தேயிலை சுற்றுலா, கால்ப் சுற்றுலா அறிமுகப்படுத்துவது குறித்து ஆராயப்படுகிறது. 75 வது சுதந்திர தின கொண்டாட்டங்களையொட்டி, மாநிலத்தில், 75 சுற்றுலா மையங்கள் பற்றிய விரிவான படக்காட்சி தயாரிக்கப்படுகிறது. இவ்வாறு, சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X