நேபாளத்தில் பஸ் விபத்து: பலி 32 ஆக உயர்வு

Updated : அக் 13, 2021 | Added : அக் 13, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
காத்மாண்டு: நேபாளத்தின் முகு மாவட்டத்தில் ஏற்பட்ட பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்து உள்ளது.முகு மாவட்டத்தில் நேபால் குன்ஜ் என்ற இடத்தில் இருந்து கம்கதி என்ற இடம்நோக்கி 45 பேருடன் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. வழியில், பிரேக் கோளாறு காரணமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.அதில், சம்பவ இடத்தில் 24 பேரும், மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் 4
நேபாளம், பஸ் விபத்து, பலி, 32 ஆக உயர்வு, மோசமானது, அதிகாரிகள், வருத்தம்,

காத்மாண்டு: நேபாளத்தின் முகு மாவட்டத்தில் ஏற்பட்ட பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்து உள்ளது.

முகு மாவட்டத்தில் நேபால் குன்ஜ் என்ற இடத்தில் இருந்து கம்கதி என்ற இடம்நோக்கி 45 பேருடன் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. வழியில், பிரேக் கோளாறு காரணமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

அதில், சம்பவ இடத்தில் 24 பேரும், மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் 4 பேரும், சிகிச்சை பலனின்றி 4 பேரும் என மொத்தம் 32 பேர் உயிரிழந்தனர். 13 பேர் காயமடைந்த நிலையில், சிலரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. இதனால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.


latest tamil news




உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் புலம் பெயர் தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முகு மாவட்டத்தில் நடந்த மோசமான விபத்துகளில் இதுவும் ஒன்று எனவும் தெரிவித்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vena Suna - Coimbatore,இந்தியா
13-அக்-202121:18:18 IST Report Abuse
Vena Suna தண்ணி போட்டு வண்டி ஓட்டி இருக்க கூடும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X