விவசாயிகள் கொல்லப்பட்ட சம்பவம் கண்டனத்திற்குரியது: நிர்மலா சீதாராமன்

Updated : அக் 13, 2021 | Added : அக் 13, 2021 | கருத்துகள் (13)
Share
Advertisement
வாஷிங்டன்: ‛‛லக்கிம்பூர் வன்முறையில் நான்கு விவசாயிகள் கொல்லப்பட்டது கண்டிக்கத்தக்கது,'' என, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்து உள்ளார்.அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், அங்குள்ள கல்வி நிலையத்தில் நடந்த கலந்துரையாடலில் பங்கேற்றார். அப்போது அவரிடம் உ.பி., மாநிலம் லக்கிம்பூர் வன்முறை தொடர்பாக கேள்வி
BJP,Nirmala,Nirmala Sitharaman,நிர்மலா,நிர்மலா சீதாராமன்

வாஷிங்டன்: ‛‛லக்கிம்பூர் வன்முறையில் நான்கு விவசாயிகள் கொல்லப்பட்டது கண்டிக்கத்தக்கது,'' என, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்து உள்ளார்.

அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், அங்குள்ள கல்வி நிலையத்தில் நடந்த கலந்துரையாடலில் பங்கேற்றார். அப்போது அவரிடம் உ.பி., மாநிலம் லக்கிம்பூர் வன்முறை தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.


அதற்கு நிர்மலா சீதாராமன் அளித்த பதில்: வன்முறையில் நான்கு விவசாயிகள் கொல்லப்பட்டது முற்றிலும் கண்டனத்திற்குரியது. அனைவரும் இதைத் தான் சொல்கிறோம். ஆனால், இம்மாதிரியான சம்பவங்கள் இந்தியாவின் பிற பகுதிகளிலும் நடக்கும் போது, இதற்கு சமமாக கேள்வி எழுப்பப்பட வேண்டும். ஆனால், உ.பி.,யில் பா.ஜ., ஆட்சி நடப்பதால் பெரிதுபடுத்தப்படுகிறது என்றார்.

இந்த சம்பவம் தொடர்பாக பிரதமர் மற்றும் அமைச்சர்கள் ஒன்றும் கூறவில்லையே என்ற கேள்விக்கு நிர்மலா அளித்த பதில்: நிச்சயம் அப்படி கிடையாது. இந்த சம்பவம் குறித்து நீங்கள் கேள்வி எழுப்பியது நல்ல விஷயம். அந்த சம்பவம் முற்றிலும் கண்டிக்கத்தக்கது. நாம் அனைவரும் அதனை தான் கூறுகிறோம். ஆனால், இம்மாதிரியான சம்பவங்கள் நாட்டின் மற்ற இடங்களில் நடப்பது தான் என் கவலை.

இந்தியாவின் மற்ற பகுதிகளிலும் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்கிறது. நீங்களும், அமர்த்தியா சென் உள்பட பலரும் ஒவ்வொரு முறையும் இதுபோன்ற சம்பவங்கள் நிகழும்போது இது குறித்து கேள்வி எழுப்ப வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
நமக்கு தேவை என்று இருக்கும்போது மட்டும் ஒரு சம்பவம் குறித்து கேள்வி எழுப்பக்கூடாது. அங்கு பா.ஜ., ஆட்சியில் இருப்பதாலேயே இந்த சம்பவம் குறித்த கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. எனது அமைச்சரவையின் சகாவின் மகன் ஒருவர் இந்த வழக்கில் சிக்கியுள்ளார். அவர் தான் இக்குற்றத்தை செய்துள்ளார்; வேறு யாரும் செய்யவில்லை என்று கருதப்படுகிறது. இது குறித்து முழுமையான விசாரணை நடத்திய பிறகு நீதி நிலைநாட்டப்படும்.

அது எனது கட்சியையோ அல்லது பிரதமரையோ தற்காப்பதாக இல்லை. இது இந்தியாவை தற்காப்பதாக இருக்கிறது. நான் இந்தியாவிற்காக பேசுவேன். ஏழைக்காக, நீதிக்காக பேசுவேன். நான் கேலி செய்ய மாட்டேன். அதுவே மற்றவர்கள் கேலி செய்யும் போது, தற்காப்பதற்காக எழுந்து நின்று, உண்மையை அடிப்படையாக வைத்து பேசுவோம் என்று அவர்களிடம் கூறுவேன் எனக்கூறினார்.


latest tamil newsவிவசாயிகள் போராட்டம் குறித்த கேள்விக்கு, வேளாண் சட்டங்கள், பல்வேறு பார்லிமென்ட் குழுக்களினால் பல ஆண்டுகளாக விவாதிக்கப்பட்டு உள்ளது. பல மாநில அரசுகளால் இது விவாதிக்கப்பட்டு உள்ளது. 2014ம் ஆண்டிற்கு பிறகு பா.ஜ., ஆட்சி அமைந்த பிறகும் வேளாண் சட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டன. பல ஆண்டுகளாக, இச்சட்டங்கள் குறித்து முன் வடிவங்கள் உருவாக்கப்பட்டிருக்கிறது. பல தரப்பினரிடம் இது குறித்து ஆலோசித்துள்ளோம். லோக்சபாவில், வேளாண் சட்டங்கள் குறித்து விரிவாக விவாதம் நடந்தது. வேளாண் துறை அமைச்சர் விரிவாக விளக்கம் அளித்தார். ராஜ்யசபாவில் தான் அதிக குழப்பம் ஏற்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
PRAKASH.P - chennai,இந்தியா
14-அக்-202100:41:26 IST Report Abuse
PRAKASH.P Is she representing for India or bjp
Rate this:
Cancel
முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
13-அக்-202123:42:27 IST Report Abuse
முக்கண் மைந்தன் //இது இந்தியாவை தற்காப்பதாக இருக்கிறது// ஏழு வருசமா நல்ல்ல்லா காத்தானுங்க
Rate this:
Cancel
முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
13-அக்-202123:40:18 IST Report Abuse
முக்கண் மைந்தன் இவுனுங்க 'டக்கு' இதான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X