அறிவியல் ஆயிரம்| Dinamalar

சிறப்பு பகுதிகள்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

Added : அக் 13, 2021
Share
அறிவியல் ஆயிரம்ஊதா ரத்தம்பூமியில் சிலந்தியில் 49,623 வகைகள் உள்ளன. அனைத்து வகை சிலந்தியும் ஆபத்தை தருவதில்லை. மனிதனின் ஆக்சிஜனில் இரும்பு மூலக்கூறு உள்ளது. இது ரத்தத்துக்கு சிவப்பு நிறத்தை அளிக்கிறது. ஆனால் சிலந்தியின் ஆக்சிஜனில் காப்பர் மூலக்கூறு இருப்பதால் இதன் ரத்தம் ஊதா நிறத்தில் உள்ளது. பெண் சிலந்திகளுக்கு அதிக பசி இருக்கும். சிலந்தி வலையில் உள்ள பட்டு, அதே அளவு

அறிவியல் ஆயிரம்

ஊதா ரத்தம்


பூமியில் சிலந்தியில் 49,623 வகைகள் உள்ளன. அனைத்து வகை சிலந்தியும் ஆபத்தை தருவதில்லை. மனிதனின் ஆக்சிஜனில் இரும்பு மூலக்கூறு உள்ளது. இது ரத்தத்துக்கு சிவப்பு நிறத்தை அளிக்கிறது. ஆனால் சிலந்தியின் ஆக்சிஜனில் காப்பர் மூலக்கூறு இருப்பதால் இதன் ரத்தம் ஊதா நிறத்தில் உள்ளது. பெண் சிலந்திகளுக்கு அதிக பசி இருக்கும். சிலந்தி வலையில் உள்ள பட்டு, அதே அளவு தடிமனான இரும்புவை விட பலமானது. பெரும்பாலான சிலந்திகளுக்கு நான்கு ஜோடி கண்கள் உள்ளன. இதன் வகை, பாலினத்தை பொறுத்து ஆயுட்காலம் 2 முதல் 20 ஆண்டுகள்.

தகவல் சுரங்கம்

தர நிர்ணய தினம்


உலகில் நுகர்வோருக்குத் தரமான பொருட்களையே தயாரித்து வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அக். 14ல் உலக தர நிர்ணய தினம் கடைபிடிக்கப்படுகிறது. சர்வதேச தர நிர்ணய அமைப்பு (ஐ.எஸ்.ஓ.,) உலக தொலைத்தொடர்பு யூனியன் (ஐ.டி.யூ.,), உலக மின் தொழில்நுட்ப ஆணையம் (ஐ.இ.சி.,) எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியர் (ஐ.இ.இ.இ.,) உள்ளிட்ட அமைப்புகளின் தரத்துக்கு உட்பட்டு தரமான பொருட்களை உருவாக்க பாடுபடும் தொழில்துறை வல்லுநர்களின் சேவைகளை பாராட்டும் விதமாகவும் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X