சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஈரோடு அருகே பூசாரியிடம் 3 பவுன் நகை மர்ம ஆசாமி்கள் பறிப்பு

Added : அக் 13, 2021
Share
Advertisement
ஈரோடு,:ஈரோடு கொள்ளுக்காடு மேட்டை அடுத்துள்ளது சாத்தம்பூர். இங்கு தனியார் கட்டுப்பாட்டில் வல்லாலீஸ்வரர் கோவில் உள்ளது. தினமும் ஒரு கால பூஜை நடக்கிறது. நன்செய் ஊத்துக்குளி மாரியம்மன் கோவில் அருகே வசிக்கும் சரவண மாணிக்கம், 50. இக்கோவில் பூசாரியாக உள்ளார்.நேற்று காலை 9.30 மணிக்கு கோவிலுக்கு வந்து பூஜை செய்து கொண்டிருந்தார். கோவிலில் பூசாரியை தவிர வேறு யாரும் இல்லை. அப்போது

ஈரோடு,:ஈரோடு கொள்ளுக்காடு மேட்டை அடுத்துள்ளது சாத்தம்பூர். இங்கு தனியார் கட்டுப்பாட்டில் வல்லாலீஸ்வரர் கோவில் உள்ளது. தினமும் ஒரு கால பூஜை நடக்கிறது. நன்செய் ஊத்துக்குளி மாரியம்மன் கோவில் அருகே வசிக்கும் சரவண மாணிக்கம், 50. இக்கோவில் பூசாரியாக உள்ளார்.

நேற்று காலை 9.30 மணிக்கு கோவிலுக்கு வந்து பூஜை செய்து கொண்டிருந்தார். கோவிலில் பூசாரியை தவிர வேறு யாரும் இல்லை. அப்போது பைக்கில் 25 வயது மதிக்கதக்க இரு வாலிபர்கள் அங்கு வந்தனர். இருவரும் முக கவசம் அணிந்து இருந்தனர்.

கண் இமைக்கும் நேரத்தில் பூசாரி கழுத்தில் அணிந்து இருந்த மூன்று பவுன் தங்க செயினை பிடித்து இழுத்து பறித்து கொண்டு அங்கிருந்து பைக்கில் ஏறி தப்பினர். தகவல் அறிந்து ஈரோடு டவுன் டி.எஸ்.பி ஆனந்த குமார், மொடக்குறிச்சி இன்ஸ்பெக்டர் தீபா ஆகியோர் அங்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

பட்ட பகலில் கோவிலுக்குள் புகுந்து பூசாரியின் கழுத்தில் இருந்த தங்க செயினை மர்ம நபர்கள் பறித்து கொண்டு சென்றது அப்பகுதி மக்கள், பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X