டில்லியில் வேவு பார்த்த பாக்., பயங்கரவாதி

Added : அக் 13, 2021
Share
Advertisement
புதுடில்லி:சமீபத்தில் கைது செய்யப்பட்ட பாக்., பயங்கரவாதி, டில்லியின் பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்துவதற்காக வேவு பார்த்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.நம் அண்டை நாடான பாக்.,கின் பஞ்சாப் மாகாணத்தைச் சேர்ந்த பயங்கரவாதி முகமது அஷ்ரபை, டில்லி சிறப்பு போலீசார் சமீபத்தில் கைது செய்தனர். அவரிடம் இருந்து, ஏ.கே., - 47 ரக துப்பாக்கி உட்பட பல ஆயுதங்கள் பறிமுதல்

புதுடில்லி:சமீபத்தில் கைது செய்யப்பட்ட பாக்., பயங்கரவாதி, டில்லியின் பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்துவதற்காக வேவு பார்த்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

நம் அண்டை நாடான பாக்.,கின் பஞ்சாப் மாகாணத்தைச் சேர்ந்த பயங்கரவாதி முகமது அஷ்ரபை, டில்லி சிறப்பு போலீசார் சமீபத்தில் கைது செய்தனர். அவரிடம் இருந்து, ஏ.கே., - 47 ரக துப்பாக்கி உட்பட பல ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.அவரிடம் நடத்தப்பட்ட விசாரணை குறித்து போலீஸ் அதிகாரிகள்கூறியுள்ளதாவது:

கடந்த 2011ல் டில்லி உயர் நீதிமன்ற வளாகத்தில் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது. அதற்கு முன், டில்லி உயர் நீதிமன்ற வளாகத்தைக் கண்காணித்து வந்ததாக விசாரணையில் கூறியுள்ளார். ஆனால், அந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் இவருக்கு தொடர்பு உள்ளதா என்பது தெரியவில்லை.

பாக்.,கில் இருந்து வங்கதேசம் வழியாக மேற்கு வங்கம் வந்துள்ளார் அஷ்ரப். அங்குள்ள சிலர் வாயிலாக, பீஹாரைச் சேர்ந்தவர்களுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. பின், பீஹாரில் வசித்து வந்த அவர், உள்ளூர் பஞ்சாயத்து அதிகாரிகள் வாயிலாக இந்திய அடையாள அட்டையைப் பெற்று உள்ளார்.டில்லியில் கடந்த சில ஆண்டுகளாக பல இடங்களை உளவு பார்த்து, பாக்.,கில் உள்ளவர்களுக்கு தகவல்கள் பகிர்ந்து வந்துள்ளார்.

டில்லியில் உள்ள செங்கோட்டை, இந்தியா கேட், போலீஸ் தலைமையகம் உள்ளிட்ட இடங்களைக் கண்காணித்து வந்ததாக விசாரணையில் கூறியுள்ளார்.இவருடன் வேறு யாருக்கு தொடர்பு உள்ளது என்பது குறித்து விசாரித்து வருகிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X