உ.பி., சிறுமி பாலியல் பலாத்காரம் தந்தை உட்பட 28 பேர் மீது வழக்கு

Added : அக் 13, 2021
Share
Advertisement
லக்னோ:உத்தர பிரதேசத்தை சேர்ந்த 17 வயது சிறுமியை அவரது தந்தை மற்றும் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த தலைவர்கள் உட்பட 28 பேர், பல ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்து வந்ததாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.உ.பி.,யில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள லலித்பூர் மாவட்டத்தை சேர்ந்த 17 வயது சிறுமி போலீசில் புகார் அளித்தார்.அதன்

லக்னோ:உத்தர பிரதேசத்தை சேர்ந்த 17 வயது சிறுமியை அவரது தந்தை மற்றும் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த தலைவர்கள் உட்பட 28 பேர், பல ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்து வந்ததாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

உ.பி.,யில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள லலித்பூர் மாவட்டத்தை சேர்ந்த 17 வயது சிறுமி போலீசில் புகார் அளித்தார்.அதன் விபரம்:என் தந்தை லாரி ஓட்டுனராக பணியாற்றி வருகிறார்.

நான் 6ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது, 'டிவி'யில் ஆபாச படங்களை போட்டுக் காட்டி என்னிடம் தவறாக நடக்க முயன்றார்.அதற்கு நான் எதிர்ப்பு தெரிவித்ததும் என்னை வெளியே அழைத்து சென்று புது ஆடைகள் வாங்கி கொடுத்து, ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தார்.

இது பற்றி வெளியே சொன்னால், என் தாயை கொன்றுவிடுவேன் என்று மிரட்டினார்.இந்த சம்பவத்துக்கு பின், என்னை அடிக்கடி வெளியே அழைத்து செல்வார். ஓட்டலில் அறை எடுத்து தங்க வைப்பார். உணவில் மயக்க மருந்து கலந்து கொடுப்பார். அதை சாப்பிட்டதும் அரை மயக்கத்தில் இருப்பேன்.அப்போது யார் யாரோ வந்து என்னை பலாத்காரம் செய்வர்; வயிற்று வலியில் துடிப்பேன்.

சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த மாவட்ட தலைவர் திலக் யாதவ், அக்கட்சியின் நகர தலைவர் ராஜேஷ் ஜெயின் ஜோஜியா, பகுஜன் சமாஜ் மாவட்ட தலைவர் தீபக் ஆஹிர்வார் உட்பட 28 பேர் என்னை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.பல ஆண்டுகளாக இந்த கொடுமையை அனுபவித்து வருகிறேன்.இவ்வாறு புகாரில் கூறப்பட்டுள்ளது.இதையடுத்து, சிறுமியின் தந்தை, அரசியல் கட்சி பிரமுகர்கள் உட்பட 28 பேர் மீது, 'போக்சோ' சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X